தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பால் கொள்முதல் மற்றும் மூலப்பொருட்களின் விலை உயர்வு என்கிற காரணத்தை கூறி கடந்த வாரம் தனியார் நிறுவனங்கள் பால், தயிர் விற்பனை விலையை உயர்த்திய நிலையில் தற்போது தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவினில் நெய், பாதாம் பால் பவுடர், SMP (Skimmed Milk Powder), தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலை குறிப்பாக ஆவின் நெய் லிட்டருக்கு 30.00ரூபாய் வரையிலும், SMP (Skimmed Milk Powder) 1Kg 40.00ரூபாய், பாதாம் பால் பவுடர் 1Kg 100.00ரூபாய், தயிர் லிட்டருக்கு 6.00ரூபாய் என கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டு புதிய விற்பனை விலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
வழக்கமாக பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலை உயர்வு தொடர்பாக ஒரு வார காலத்திற்கு முன் பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை வழங்கி அமுல்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போதைய விற்பனை விலை உயர்வு இன்று (04.03.2022) முதல் அமுலுக்கு வருகிறது என்கிற தகவலை 24மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது நேற்றைய (03.03.2022) தினமே ஆவின் நிர்வாகம் அறிவித்தது.
மேலும் படிக்க: திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் பெண் மேயரானார் இளமதி..
ஆவின் பால் பொருட்களின் இந்த வரலாறு காணாத விற்பனை விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், தமிழக முதல்வர் ஆவின் பால் பொருட்கள் விற்பனை விலை உயர்வு விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு பொதுமக்கள் தலையில் ஆவின் நிர்வாகம் சுமத்தியிருக்கும் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் மக்களை வதைக்கும் வேலையை தி.மு.க அரசு ஆரம்பித்திருக்கிறது.
சாமானிய மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.