ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு.. இன்று முதல் அமலாகும் புதிய விலை!

ஆவின் நெய் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு.. இன்று முதல் அமலாகும் புதிய விலை!

ஆவின் நெய்

ஆவின் நெய்

Aavin | பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது உயர்ந்து வந்த நிலையில் கடந்த 9 மாதங்களில் ஆவின் நெய் விலை 3வது முறையாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் நெய் விலையை 50ரூபாய் அதிகரித்து ஆவின் உத்தரவிட்டுள்ளது.

ஆவின் பொருட்களின் விலையானது அவ்வப்போது உயர்ந்து வருகிறது. ஐஸ் கிரீம், தயிர், நெய், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் உள்ளிட்டவைகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டது. இந்தநிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், ஒரு லிட்டர் ஆவின் நெய்யின் விலை 580.00ரூபாயில் இருந்து 630.00ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலையை தொடர்ந்து, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவினில், 5 லிட்டர் நெய் பாட்டில் பாட்டில், 2,900 ரூபாயில் இருந்து 3,250 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் நெய் ரூ.580 ரூபாயில் இருந்து, ரூ. 630 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் 290 ரூபாயில் இருந்து ரூ. 315 ஆக உயர்ந்துள்ளது என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.  200 மி.லி 130 ரூபாயில் இருந்து ரூ.145 ஆகவும், 100 மி.லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.75 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Also see... ஹெல்மெட் போடாம போகாதீங்க கோவை மக்களே..! தீவிர தணிக்கையில் போலீசார்..!

புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Aavin