Home /News /tamil-nadu /

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகம்!

தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகம்!

இனிப்பு வகைகள்

இனிப்பு வகைகள்

பால் விலையை குறைத்ததன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 225 கோடி இழப்பு ஏற்படுகிறது எனவும் ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
பால் விலையை குறைத்ததன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ.225 கோடி இழப்பும் ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பும் ஏற்படுவதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் நிறுவனம் பிரத்யேகமாக தயாரித்துள்ள 9 இனிப்பு வகைகளை அறிமுகம்  செய்து வைத்தார் பால்வளத்துறை அமைச்சர் நாசர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தீபாவளிக்கு சிறப்பு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது எனவும் வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் இந்த சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது இந்த இனிப்பு வகைகள் ரூ. 85 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள 275 பால், இனிப்பு வகை பொருட்களுடன், நெய் பாதுஷா, கருப்ப்பட்டி அல்வா, நட்ஸ் அல்வா, காஜு கட்லி உள்ளிட்டவற்றுடன் புதிதாக 9 இனிப்பு வகைகள் அறிமுகபடுத்தபட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 250 கோடி வரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்க பட்டுள்ளது என கூறினார்.

மேலும் எல்லா இனிப்பு வகைகளும் தனியார் விற்பனை நிறுவனங்களை ஒப்பிடும் போது 20% குறைத்து தான் விற்கப்படுகிறது என தெரிவித்தார்.

தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாக தான் உயர்த்தபட்டுள்ளது என கூறிய அமைச்சர், மத்திய அரசு  GST போடுகிறது, மத்திய அரசு நேர்முகமாக 5% சதவீதம் GST உயர்த்துகிறது, மறைமுகமாக 20% சதவீதம் உயர்த்துகிறது. அதனால் தான் தமிழ்நாடு அரசும் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது என கூறினார்.

இதையும் வாசிக்க: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

இதனை தொடர்ந்து, பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது எனவும் அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் எனவும் தெரிவித்தார்.

பால் விலையை குறைத்ததன் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 225 கோடி இழப்பு ஏற்படுகிறது எனவும் ஒரு நாளைக்கு ரூ. 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது எனவும் தெரிவித்தார்.

ஆவினில்  தற்போது அறிமுக படுத்தப்பட்டுள்ள பொருட்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் எனவும் தீபாவளிக்கு இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
Published by:Siddharthan Ashokan
First published:

Tags: Aavin, Diwali, Tamilnadu

அடுத்த செய்தி