Home /News /tamil-nadu /

ஆவின் தயிர், நெய் விலை அதிரடி உயர்வு

ஆவின் தயிர், நெய் விலை அதிரடி உயர்வு

ஆவின் தயிர், நெய் விலை உயர்வு

ஆவின் தயிர், நெய் விலை உயர்வு

Aavin : மத்திய அரசின் 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை காரணம் காட்டி, ஆவின் நிர்வாகம் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி உள்ளது.

    ஆவின் நிர்வாகம் தயிர் மற்றும் நெய் விலையை  உயர்த்தியுள்ளது. அதன்படி, 100 கிராம் ஆவின் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் ஆவின் தயிர் விலை 25 லிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் தயிர் பாக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

    இதேபோல, ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    Must Read : கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற பெற்றோர் சம்மதம் - சொந்த ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடு

    கடந்த மார்ச் மாதத்தில் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Aavin

    அடுத்த செய்தி