ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சிக்காத ராஜேந்திர பாலாஜி; திணறும் காவல்துறை

சிக்காத ராஜேந்திர பாலாஜி; திணறும் காவல்துறை

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு தனிப்படை விரைவதற்கு முன்பாகவே அவருக்கு தகவல் கசிந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், காவல் துறையில் இருந்து தகவல் கசிகிறதா என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஆவின் முறைகேடு வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை பிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறிவருகின்றனர்.

  ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடந்த 17 ஆம் தேதி முதல் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை 8 தனிப்படை தேடிவருகிறது.

  கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து உதவி செய்ததாக திருப்பத்தூரை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கியிருக்கலாம் என தனிப்படை அங்கும் விரைந்தது. எனினும் அவரை பிடிக்க முடியவில்லை.

  இதனிடையே ராஜேந்திர பாலாஜி சரணடைய வேண்டும் அல்லது முன் ஜாமின் பெற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்திருந்தது. ராஜேந்திர பாலாஜி வெவ்வேறு சிம்கார்டுகள் பயன்படுத்தி, வழக்கறிஞரை தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது.  மேலும், ராஜேந்திர பாலாஜி இருப்பதாக சந்தேகப்படும் இடங்களுக்கு தனிப்படை விரைவதற்கு முன்பாகவே அவருக்கு தகவல் கசிந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், காவல் துறையில் இருந்து தகவல் கசிகிறதா என்ற சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

  இதையும் படிங்க: புதுக்கோட்டையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு - வழக்குப்பதிவில் காவல்துறையும் சேர்ப்பு

  Published by:Murugesh M
  First published:

  Tags: Aavin, Police, Rajendra balaji