முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஆவின் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

ஆவின் பால், நெய்யை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு!

ஆவின் வெண்ணெய்

ஆவின் வெண்ணெய்

உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ. 52 இருந்த நிலையில், ரூ. 55 அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் நெய்யை தொடர்ந்து ஆவின் வெண்ணெயின் விலையும் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆவின் பால், ஆவின் நெய் விலை உயர்வை தொடர்ந்து, ஆவின் நிறுவனம் தயாரிக்கும் வெண்ணெயின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

அதன்படி சமையலுக்கு பயன்படுத்தப்படும் உப்பு கலக்காத வெண்ணெய் 500 கிராம், ரூ. 250 விற்பனை செய்யப்பட்ட நிலையில், அதன் விலை ரூ. 260 உயர்த்தப்பட்டுள்ளது.

உப்பு கலக்காத வெண்ணெய் 100 கிராம் ரூ. 52 இருந்த நிலையில், ரூ. 55 அதிகரிக்கப்பட்டுள்ளது. உப்பு கலக்கப்பட்ட 500 கிராம் ஆவின் வெண்ணெயின் விலை ரூ. 265 ஆகவும், 100 கிராம் வெண்ணெயின் விலை ரூ. 55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

200 கிராம் எடை கொண்ட வெண்ணெய் கட்டி ரூ. 130க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், ரூ. 140 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

First published:

Tags: Aavin, Butter, Hiked price