முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி - ஆரி வெளியிட்ட அப்டேட்!

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி - ஆரி வெளியிட்ட அப்டேட்!

நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக நடிகர் ஆரி கூறியுள்ளார்

நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக நடிகர் ஆரி கூறியுள்ளார்

நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக நடிகர் ஆரி கூறியுள்ளார்

 • 1-MIN READ
 • Last Updated :

  உதயநிதி நடிப்பில் அடுத்து வெளியாகும் நெஞ்சுக்கு நீதி படம் குறித்த புதிய தகவலை நடிகர் ஆரி வெளியிட்டுள்ளார்.

  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள ஆர்டிகிள் 15 ஐ அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்திப் படம், ஆர்டிகிள் 15. ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார் நடித்த இந்தப் படத்தை அனுபவ் சின்கா இயக்கியிருந்தார். 2019 இல் படம் வெளியானது.

  சாதி, மத, இன, மொழி அடிப்படையிலான வெறுப்பை குறித்த இந்தப் படம் விமர்சனரீதியாக பாராட்டுக்களை பெற்றது.

  இதனை போனி கபூர் தமிழில் ரீமேக் செய்துள்ளார். உதயநிதி ஆயுஷ்மான் குரானா நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தான்யா, ஆரி, சிவாங்கி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். கனா படத்தை இயக்கிய அருண்ராஜ காமராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

  இதையும் படிங்க.. பிக் பாஸில் பிரியங்காவை வெளியேற்ற முடிவு செய்த ராஜூ.. புரமோவில் அதிர்ச்சி!

  முன்னாள் முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறான நெஞ்சுக்கு நீதியை இந்தப் படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்கள். முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அனுமதி பெற்றே இந்த டைட்டிலை பயன்படுத்தியதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.

  நெஞ்சுக்கு நீதி படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது டப்பிங் பணிகள் நடந்து வருவதாக நடிகர் ஆரி கூறியுள்ளார். டப்பிங் பேசும் படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்திருக்கும் அவர், டப்பிங் தொடங்கியது என குறிப்பிட்டுள்ளார்.

  இதையும் படிங்க.. மரணத்திற்கு பிறகும் ரசிகர்கள் மத்தியில் வாழும் விஜே சித்ரா!

  இதன் மூலம் படம் போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டேஜில் இருப்பது தெரிய வந்துள்ளது. அடுத்த வருடம் படத்தை வெளியிடுகின்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: