தமிழக மீனவர்கள் சென்ற படகு லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது: மீனவர்களை தேடும் பணி மும்முரம்

தமிழக மீனவர்கள் உட்பட 9 பேருடன் கொச்சியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு, லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது.

தமிழக மீனவர்கள் உட்பட 9 பேருடன் கொச்சியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு, லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது.

 • Share this:
  தமிழக மீனவர்கள் உட்பட 9 பேருடன் கொச்சியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகு, லட்சத்தீவு அருகே கடலில் மூழ்கியது.

  அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள டவ்-தே புயல் நாளை அதிகாலையில் அதி தீவிர புயலாக வலுபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

  இதனால், மத்திய கிழக்கு அரபிக்கடல், தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோர பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 75-85 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 95 கிலோமீட்டர் வேகத்திலும் நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 70-80 கிலோமீட்டர் வேகத்திலும் இடைஇடையே 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் இப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.

  இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவருக்கு சொந்தமான  ‘ஆண்டவர் துணை’ என்னும் படகில் 7 தமிழக மீனவர்கள் உட்பட 9 மீனவர்கள் கொச்சியில் இருந்து மீன் பிடிக்க சென்றனர். லட்சத்தீவில் இருந்து 100 நாட்டிக்கல் தொலைவில் கடும் புயலில் சிக்கிய  படகு கடலில் கவிழ்ந்து மூழ்கியது. இந்த படகுடன் பயணித்த மேலும் இரண்டு படகுகள் லட்சத்தீவை பத்திரமாக சென்றடைந்தன.

  இந்நிலையில், மூழ்கிய படகில் இருந்த மீனவர்களின் நிலை குறித்து தெரியாத நிலையில், அவர்களை மீட்கும் பணியில் கடற்படையினர்  ஈடுபட்டு வருகின்றனர்.

  தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 850க்கும் மேற்பட்ட படகுகள் மீன் பிடிப்பதற்காக தற்போது கடலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரைக்கு வரும் எந்த படகாக இருந்தாலும் அடைக்கலம் வழங்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், கொரோனா பரிசோதனைக்கு பின்னரே, படகில் இருப்பவர்கள் கரைக்கு வர அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: