“நடந்தாய் வாழி காவிரி” என்று, தான் செல்லுமிடமெல்லாம் வளமும், நலமும் செழிக்கச் செய்பவள் காவிரித்தாய். கன்னிப்பெண்ணான காவிரி, ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து (பருவமடைந்து) கடல்ராஜனை சென்றடைகிறாள் என்பதே ஆடிப்பெருக்கின் ஐதீகம்.
ஆடி பதினெட்டாம் நாளன்று, பெருக்கெடுத்து ஓடும் காவிரி கரையின் இருபுறமும் திரளும் டெல்டா மாவட்ட மக்கள், பூ, பழம், மஞ்சள், காதோலை, கருகமணி உள்ளிட்ட மங்கலப் பொருட்களை வைத்து, காவிரித்தாயை வழிபடுவது வழக்கம். மேலும், ஆடி மாதத்தில் பிரிந்திருக்கும் புதுமண ஜோடிகள், காவிரி கரைக்கு வந்து தங்களது திருமணத்தின் போது அணிந்திருந்த மாலையை ஆற்றில் விடுவர்.
‘கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும்’ என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர். இளைய பெண்களுக்கும் கட்டிவிடுவர். தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைத்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆடிப்பெருக்கான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஏராளமாக கூடியுள்ளனர். இதைத்தவிர, ஆங்காங்கே உள்ள காவிரி, கொள்ளிடக் கரைகளில் பெண்கள் திரண்டுள்ளனர்.
Must Read : பெரம்பலூர்: முடிவுக்கு வந்தது 110 ஆண்டுகளாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இருந்த பிரச்சனை!
கொரானா பரவல் காரணமாக, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்துறைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாண்டு தடைக்கு பின்னர் ஆடிப்பெருக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் இருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நீராடுவதற்கு ஆற்றில் இறங்க வேண்டாம் என்று கரூர் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadi, Cauvery River, Cauvery water, Trichy