முருகன் கோவிலில்களில் ஆடி கிருத்திகை திருவிழா!

சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலில் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Web Desk | news18
Updated: July 26, 2019, 3:03 PM IST
முருகன் கோவிலில்களில் ஆடி கிருத்திகை திருவிழா!
ஆடி கிருத்திகை
Web Desk | news18
Updated: July 26, 2019, 3:03 PM IST
தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் தமிழ்க் கடவுளான முருகனின் நட்சத்திரமாகும். ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷமானதாக கருதப்படுகிறது. கார்த்திகை பெண்களை போற்றும் வகையில், "கிருத்திகை" விரத திருநாளாக கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, வீதி உலா போன்றவை வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. இதே போன்று சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


ஆடி மாதத்தின் சிறப்புகளும் விரதங்களும்!

மற்ற தினங்களில் காட்டிலும் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... ரோஸ் நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

Loading...


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 26, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...