Home /News /tamil-nadu /

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வயதுவாரியாக மது விற்பனை.. ஆதார் கட்டாயம்!

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வயதுவாரியாக மது விற்பனை.. ஆதார் கட்டாயம்!

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் 92 டாஸ்மாக் கடைகள் இன்று திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் வயது வாரியாக மதுபாட்டில்களை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி, 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், 40 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் மதியம் 1 மணி முதல் 3 மணி வரையிலும் மது வாங்குவதற்கு வர முடியும். மற்றவர்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மது விற்பனை நடைபெற உள்ளது. வயதை உறுதி செய்யும் வகையில் மது வாங்க வருபவர்களுக்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாகையில் உள்ள டாஸ்மாக் கடைகள் முன்பு காலை முதலே மதுப்பிரியர்கள் வரத்தொடங்கி உள்ளனர். சமூக இடைவெளியைப் பின்பற்றி வட்டமிடப்பட்டும், மூங்கில் சாரம் அமைத்தும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காாரணமாக வயதான குடிமகன்கள் காலையில் இருந்து டாஸ்மாக் கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:
Published by:Rizwan
First published:

Tags: Lockdown, Nagapattinam, Tasmac

அடுத்த செய்தி