முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முடங்கிய ஆன்லைன் சேவை - மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீடிப்பு?

முடங்கிய ஆன்லைன் சேவை - மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீடிப்பு?

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு

நேற்று மாலை வரை 2 கோடியே 59 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மின் துறையின் இணையதளத்தில் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சேவை கேபிளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை தெரிவித்துள்ளது.

இலவசம், மானியம் பெறும் மின்நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. மின் நுகர்வோரின் வசதிக்காக ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து இன்று வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி, மின் வாரிய அலுவலகங்கள் மற்றும் சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை வரை 2 கோடியே 59 லட்சம் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மொத்தம் 97 சதவிகிதம் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ள நிலையில், இதுவரை இணைத்திடாதவர்கள், இன்று மாலைக்குள் விரைந்து இணைத்திட வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த  நிலையில், மின் துறையின் இணையதளத்தில் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சேவை கேபிளில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக மின்சார துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின் வாரியம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அன்பான நுகர்வோர் கவனத்திற்கு, சேவை கேபிளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டான்ஜெட்கோவின் ஆன்லைன் சேவைகள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளன. சேவைகள் விரைவில் மீட்கப்படும். சிரமத்திற்கு வருந்துகிறோம்.” என தெரிவித்துள்ளது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மின் துறையின் இணையதளத்தில் ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

First published:

Tags: Aadhar, TNEB