ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற ஆதார் அவசியம் - தமிழக அரசு அதிரடி

அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெற ஆதார் அவசியம் - தமிழக அரசு அதிரடி

ஆதார் அவசியம் - தமிழக அரசு அதிரடி

ஆதார் அவசியம் - தமிழக அரசு அதிரடி

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமனம் செய்யப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மாநில அரசின் திட்டங்கள், சேவைகள், மானியங்களை பெறுவோர் அடையாள ஆவணமாக ஆதாரை அளிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமைக்கு துணை அங்கீகார முகமையாக கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை நியமனம் செய்யப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அரசிதழில் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறையானது அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை ஆன்லைனில் வழங்கி வருகிறது.

அரசின் பலன்களைப் பெறுவதற்கு ஆதார் எண்ணை வழங்க வேண்டும். ஆதார் ஒதுக்கப்படும் வரை, ஆதார் இல்லாதவர்களுக்கும் பலன்கள் வழங்கப்படும் என்றும் கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை மூலம் பயன்களை பெறுவோரின் ஆதார் தகவல்களை அந்த துறையே உறுதிசெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Aadhar, Tamil Nadu government