முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம் : சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் கட்டாயம் : சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஆதார் இணைப்பு

ஆதார் இணைப்பு

பராமரிப்பு உதவித்தொகை பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும், 23.12.2022க்குள் தங்களின் ஆவணங்களை வழங்கிட வேண்டும் - சென்னை மாவட்ட ஆட்சியர்

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்  தொகை ரூ. 2000- பெறும் மாற்றுத் திறனாளிகள் அனைவரும், ஆதார் அட்டை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் ரூ.2000/- மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மனவளர்ச்சிகுன்றியோர் (ID) தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர் (MuD), கடுமையாகபாதிக்கப்பட்டோர் (SD), தொழுநோயால் பாதிக்கப்பட்டோர் (LC) மற்றும் முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் அட்டையினை, அரசிற்கு சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட இவ்வலுவலகத்தின் மூலம் மேற்கண்ட பராமரிப்பு உதவித்தொகை பெறும் அனைத்து மாற்றுத்திறனாளிகளும், 23.12.2022க்குள் தங்களின் ஆவணங்களான மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு எண், UDID அட்டை,மருத்துவச் சான்று,மற்றும் மாற்றுத்திறனாளி நபரின் புகைப்படம்-1) ஆகிய நகல்களுடன் சிறப்புபள்ளிகளில் வழங்கிட வேண்டும்.

இதையும் வாசிக்க: வேலைவாய்ப்பில் முதியோருக்கு உதவும் அரசின் SACRED இணையதளம்

உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத் திறனாளிகள் கீழ்காணும் மண்டலங்களில் உள்ள குறிப்பிட்ட சிறப்புப் பள்ளிகளில் வழங்கிட வேண்டும்.

1. திருவொற்றியூர், மண்டலத்தில் வார்டு எண். 1 முதல் 14 வரை அன்பாலயா சிறப்புப் பள்ளி எண் 67/4/6, கிராமம் தெரு, திருவொற்றியூர், சென்னை-19 தொலைபேசி எண். 8939674767.

2.மணலி, மண்டலத்தில் வார்டு எண்.15 முதல் 21 வரை ஆப்பர்சூனிட்டி சிறப்புப்பள்ளி எண். 18/3, புதிய காலனி பிரதான தெரு, பழையநாப்பாளையம், மணலி புது நகர்,சென்னை -103 தொலைபேசிஎண்: 9447857285

3. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண். 2 முதல் 31 வரை மைத்ரி சிறப்புப்பள்ளி, எண்.98. கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களாபுரம், பெரம்பூர், சென்னை- 12, தொலைபேசிஎர். 9080183069

4. தண்டையார்பேட்டை, மண்டலத்தில் வார்டு எண்.34 முதல் 48 அவ்வைகாப்பகம் சிறப்புப்பள்ளி, எண்.17/B, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சென்னை-81, தொலைபேசிஎண். 7395949500

5. ராயபுரம், மண்டலத்தில் வார்டு எண்.49 முதல் 63 வரை எஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, எண்.34, வீராகுட்டிதெரு, பழைய வண்ணாரப்பேட்டை சென்னை 21, தொலைபேரி எண். 8778684301

6. திரு.வி.க.நகர், மண்டலத்தில் வார்டு எண் 64 முதல் 78 வரை சி.எஸ்.ஐ. புத்துயிர் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப்பள்ளி, எண்.54, ராகவன்தெரு, பெரம்பூர், சென்னை- 11, தொலைபேசி எண். 9962625019

7. அம்பத்தூர் மண்டலத்தில் வார்டு எண். 70 முதல் 03 வரை வசந்தம் சிறப்புப் பள்ளி, கிழக்கு முகப்பேர், (EB ஆபிஸ் அருகில்) சென்னை 37, தொலைபேரி எண்: 044-2656062

8.அண்ணா நகர், மண்டலத்தில் வார்டு எண். 94 முதல் 108 வரை விஸ்டம் லேனிங் சென்டர் புதிய எண்:195, 6 வது அவென்யூ அண்ணாநதர் மேற்கு, சென்னை- 40, தொலைபேசி எண்: 9626160647

9. தேனாம்பேட்டை மண்டலத்தில் வார்டு எண்.109 முதல் 126 வரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்  டி.எம்.எஸ்.வளாகம்,தேனாம்பேட்டை, சென்னன- 6, தொலைபேசி எண் 044 24744758,

10. கோடம்பாக்கம் மண்டலத்தில் வார்டு எண்.127 முதல் 142 வரை மாநில வள பயிற்சி மையம், peripheral Hospital campus,Near ESI, கே.கே.நகர், சென்னை - 78, தொலைபேசி எண். 18004250111, 8838579292

11. வளசரவாக்கம், மண்டலத்தில் வார்டு எண். 143 முதல் 155 வரை விஜய் ஹீயூமன் சர்விஸ் எம்.ஜி.ஆர். ஜானகிமெட்ரிஞ்லேன் பள்ளி, சத்தியா கார்டன்,  பி.வி ராஜாமன்னார்சாலை, கே.கே.நகர், சென்னை -78,  தொலைபேசி எண்.18004250111,7358583809.

இதையும் வாசிக்க: பொங்கல் பண்டிகை: ஜனவரி 13-ம் தேதி பயணத்திற்கு இன்று முன்பதிவு..!

12. ஆலந்தூர் மண்டலத்தில் வார்டு எண்.156 முதல் 167 வரை மாநில வளபயிற்சி மையம்,Peripheral Hospitai Campus, Near ESI, கே.கே.தகள் சென்னை-78, தொலைபேசி எண்.18004250111,7358583809

13. அடையார் மண்டலத்தில் வார்டு எண். 170 முதல் 182 வரை செயின்ட் லூயிஸ் காதுகேளாதோர் மற்றும் பார்வைதிறன் குறைபாடுடையோர் சிறப்புப்பள்ளி கெனால் பேங்க் ரோடு, பழைய கேன்சர் மருத்துவமனை அருகில் காந்திநகர், அடையார். சென்னை - 20, தொலைபேசி எண்: 9444851437.

14 பெருங்குடி, மண்டலத்தில் வார்டு எண். 168,169,183-191 வரை ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு,தரமணிசாலை, சென்னை- 113 தொலைபேசி எண்8122879150.

15. சோழிங்கநல்லூர், மண்டலத்தில் வார்டுஎண்.192 முதல் 200 வரை பாத்வே சிறப்புப்பள்ளி, எண்.E76/1, 12வது மேற்கு தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர் , சென்னை- 41. தொலைபேசி எண்.9840792687

எனவே, ரூ.2000/ உதவித்தொகையை தொடர்ந்து பெறும் பொருட்டு மேற்கண்ட இடங்களில் சான்றுகளை சமர்ப்பிக்குமாறு மேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

First published:

Tags: Aadhar