காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்தை அறுத்து படுகொலை செய்த இளைஞன்- அடிவெளுத்து காவல்துறையில் ஒப்படைத்த பொதுமக்கள்

கோப்புப் படம்

ஆந்திராவில் காதலிக்க மறுத்த பெண்ணை இளைஞன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.

 • Share this:
  ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து இளைஞன் கொலை செய்துள்ளான்.
  கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

  ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பட்வேலு மண்டலம் சென்னூர்ராஜு பள்ளி கிராமத்தை சேர்ந்தவன் சரண். அருகே உள்ள சிந்தலசெருவு கிராமத்தை சேர்ந்த சிரிஷா என்ற பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தான். இந்நிலையில் சிரிஷா காதலை ஏற்க மறுத்ததால் கோபமடைந்த சரண். சிரிஷாவின் சொந்த ஊருக்குச் சென்று சிரிஷாவிடம் தான் கடைசியாக உன்னிடம் பேச வேண்டும் என தனியாக அழைத்துள்ளார்.

  சிரிஷா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கழுத்தில் பலமாக அறுத்துள்ளான். இதனால் அலறி துடித்த நிலையில் அங்கு வந்த கிராம மக்கள் சரணை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இந்நிலையில் கழுத்து அறுபட்ட நிலையில் கிடந்த திரிஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் கூறிய நிலையில் அந்த இளைஞனை கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வழக்கு பதிவு செய்த போலீசார் காயங்களுடன் இருந்த சரணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Karthick S
  First published: