Home /News /tamil-nadu /

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால் தற்கொலை செய்த இளைஞரின் குடும்பத்தாருக்கு அண்ணாமலை ஆறுதல்

பிரதமர் வீட்டுவசதித் திட்டத்தில் லஞ்சம் கேட்டதால் தற்கொலை செய்த இளைஞரின் குடும்பத்தாருக்கு அண்ணாமலை ஆறுதல்

மணிகண்டன்

மணிகண்டன்

பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம் கேட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் குடும்பத்தினரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • News18
  • Last Updated :
    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கமுகக்குடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடன் பெற்று வீடு கட்டி வந்தார். இந்த நிலையில் கடனின் மூன்றாவது தவணை தொகையை பெறுவதற்கு பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் என்பவர் லஞ்சம் கேட்டதாகவும் தொடர்ந்து மணிகண்டனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் கூறி முகநூலில் வீடியோ பதிவு செய்துவிட்டு மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு மணிகண்டன் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவல்துறை தரப்பில் தற்கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்கொலைக்கு தூண்டியதாக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரன் மீது 306 - A என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று திருவாரூர் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உயிரிழந்த மணிகண்டனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மேலும் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள பாஜக உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார்.

    மேலும் தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவது குறித்து புகார் அளிக்க பாஜக சார்பில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் லஞ்சம் பெறும் அரசு ஊழியர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Crime News, Thiruvarur

    அடுத்த செய்தி