இலவசம் வேண்டாம்... படிச்ச எங்களுக்கு அறிவு இருக்கு: ஓர் இளம் வாக்காளர்

வாக்காளர்

இலவசங்கள் வேண்டாம்... படித்த எங்களுக்கு அறிவு உள்ளது.

 • Share this:
  இலவசம் வேண்டாம் படிச்ச எங்களுக்கு அறிவு இருக்கு நாட்டு கடனை நார்மல்  நிலைமைக்கு எடுத்து  வரும் கட்சிக்கு  தனது ஓட்டு  என்று மதுரவாயல் தொகுதி இளம் பெண் வாக்காளர் ஒருவர் கூறியுள்ளார்.

  2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மதுரவாயல் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் பென்ஜமின் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில்  அதிமுகவினர் அதன் கூட்டணி கட்சியினர்  மதுரவாயல் தொகுதிக்கு உட்ப்பட்ட வார்டுகளில் வீடூ வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

  இபோல பிற கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் பரபரப்பாகக் காணப்படுகின்றது.

  இந்நிலையில், வாக்காளர்களும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். தாங்கள் வாக்கு யாருக்கு என்று இளம் தலைமுறையினர் பல்வேறு மாறுபட்ட கருத்துகளுடன் இருந்தாலும், பெரும்பாலும் வாக்களிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

  அப்படி மதுரவாயல் தொகுதியைச் சேர்ந்த ஓர் இளம் பெண் வாக்காளர், இலவசங்கள் வேண்டாம் படித்த எங்களுக்கு அறிவு உள்ளது எந்த கட்சி ஆட்சி வந்தால் நல்லா இருக்கும் என்பது தெரியும்.

  Must Read :  'வெற்றி பெற்றதும் வலிமை அப்டேட் நிச்சயம்’ - வானதி சீனிவாசன்!

  தமிழக  கடனை நார்மல் நிலைமைக்கு கொண்டு வரவேண்டும் இளம் தலைமுறையினருக்கு தேவையான அரசு அமைய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாகவும்,  அத்தகைய கட்சிக்கே தனது ஓட்டு இருக்கும் என்று கூறியுள்ளார்.
  Published by:Suresh V
  First published: