ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

15 வயது சிறுமி கடத்தல், திருமணம்... இளைஞர் போக்சோவில் கைது - பெற்றோரிடம் விசாரணை

15 வயது சிறுமி கடத்தல், திருமணம்... இளைஞர் போக்சோவில் கைது - பெற்றோரிடம் விசாரணை

இளைஞர் போக்சோவில் கைது

இளைஞர் போக்சோவில் கைது

Namakkal : ராசிபுரம் அருகே குழந்தை திருமணத்திற்கு இரு வீட்டு பெற்றோர்களும் உதவினரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ராசிபுரம் அருகே 15 வயது சிறுமியை கடத்தி, ஆறு மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாக இளைஞர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இரு வீட்டு பெற்றோர்களிடம் திருமணத்தை மறைத்த குற்றம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட உடையார்பாளையம் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுமியை கடந்த 6 மாதத்திற்கு முன்பு கொல்லிமலையை சேர்ந்த மேஸ்திரி கந்தசாமி என்பவர் ஆசை வார்த்தை கூறி கடத்தி திருமணம் செய்தாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு காரணமாக சிறும் பிரிந்து அம்மா வீட்டிற்க்கு வந்தாக கூறப்படுகிறது. பல முறை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்தும் சிறுமி வராததால் கணவன் கந்தசாமி மற்றும் அவருடைய கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து பிலிப்பாகுட்டை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை காரில் கடத்தியதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். கணவன் கந்தசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்த போலீசார் மற்ற 7 பேரின் மீது சிறுமி கடத்தல், குழந்தை திருமணத்திற்கு உதவியது போன்ற வழக்குகள் பதிந்து கைது செய்துள்ளனர்.

Must Read : மணப்பாறை வாலிபர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்... தம்பியே கொலை செய்தது அம்பலம்

மேலும், குழந்தைத் திருமணத்திற்கு உடந்தையாக இருந்தது, 6 மாதமாக திருமணத்தை மறைத்த இரு வீட்டு பெற்றோர்களையும் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல  அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், பெற்றோர்களும் கைது செய்யப்படுவார்கள் என சொல்லப்படுகிறது.

செய்தியாளர் - சுரேஷ், ராசிபுரம்.

First published:

Tags: Child marriage, Namakkal, POCSO case, Rasipuram