• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது!

500-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் கைது!

கைது செய்யப்பட்ட சரண்

கைது செய்யப்பட்ட சரண்

இளம் பெண்கள் மானத்திற்கு பயந்து இது போன்ற பாலியல் சீண்டல்கள் குறித்து புகார் அளிக்காமல் இருக்க வேண்டாம் எனவும் அவர்களின் ரகசியம் காக்கபடும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
500-க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த இளைஞர் கைது செய்யப்பட்ட நிலையில் தினமும் 2 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரக்கூடிய 20 வயது இளம்பெண் ஒருவர் வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு நடந்து செல்லும் போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து அந்த இளம்பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த இளைஞரின் இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவை சேர்ந்த சரண்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து  போலீசார் விரைந்து சரணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் தான் செல்லும் இடங்களிலெல்லாம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டு வந்ததாக சரண் தெரிவித்துள்ளார். இவர் தனது படிப்பை முடித்துவிட்டு தற்போது பூந்தமல்லியில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தின் கலெக்சன் ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார் என்பதும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் பணம் வசூலித்து வருகிறார் என்பதும் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் வசூலிப்பதற்காக சரண் செல்லும் போது அந்த இடங்களில் பார்க்கக்கூடிய அழகான கல்லூரி மற்றும் இளம் பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனத்தின் பின் தொடர்ந்து அவர்கள் அருகில் சென்றதும் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

Also read... மகளிர் குழு கடனுக்காக அமைச்சர்கள் வழங்கிய காசோலைக்கு பணம் தர மறுக்கும் வங்கிகள் - வேதனையில் கோவில்பட்டி பெண்கள்

பாதிக்கப்படும் பெண்கள் மானத்திற்கு பயந்து வெளியில் சொல்லவும், புகார் அளிக்கவும் தயங்குவதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி சரண் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் என 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாகவும் சுமாராக நாளொன்றுக்கு 2 லிருந்து 5 பெண்கள் வரை பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக போலீசார் விசாரணையில் சரண் வாக்குமூலம் அளித்துள்ளர்.

மேலும் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த சரண் மீது பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இளம் பெண்கள் மானத்திற்கு பயந்து புகார் அளிக்காமல் இருக்க வேண்டாம் எனவும் அவர்களின் ரகசியம் காக்கபடும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: