• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுரையில் அதிர்ச்சி சம்பவம் - இளைஞரைக் கொலை செய்து காளிக்கு படைக்கப்பட்ட தலை

மதுரையில் அதிர்ச்சி சம்பவம் - இளைஞரைக் கொலை செய்து காளிக்கு படைக்கப்பட்ட தலை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

மதுரையில் இளைஞரின் தலையை தணியாக துண்டித்து காளிக்கு படைத்த சம்பவம் நடந்துள்ளது.

  • Share this:
    மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் 22 வயதான அல்வா என்ற முத்துச்செல்வம். அவனியாபுரம் பா.ம.க பிரமுகர் இளஞ்செழியன் மற்றும் அவரது தம்பி மாரி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்.

    இளஞ்செழியன் கொலைக்கு முன்பிருந்தே இருதரப்பும் மாறி மாறி கொலை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இளஞ்செழியன் கொலைக்கு பிறகு இருதரப்பும் ஒருவரை ஒருவர் பழிதீர்க்கும் நாளை எதிர்பார்த்துக் கொண்டே காத்து இருந்தனர்.

    இந்நிலையில் முத்துச்செல்வம் ஞாயிற்றுக்கிழமை மாலை பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்து அவரை நோட்டமிட்ட 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று, வழிமறித்து அவரை விரட்டியது.

    முன்பே திட்டமிட்டபடி அங்குள்ள பத்ர காளியம்மன் கோவில் வாசலுக்கு முத்துச்செல்வத்தை விரட்டிச் அந்த கும்பல் விரட்டிச் சென்றது. காளி கோவில் வாசலில் சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அவரை சரமாரியாக தாக்கினர்.

    ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்த முத்துச் செல்வத்தின் தலையை தனியாக துண்டித்து காளிக்கு பலிகொடுப்பது போல் கோவில் வாசலில் வைத்தனர். மனநோயாளியைப்போல் வெற்றி கூச்சலிட்டபடி அங்கிருந்து தப்பி தலைமறைவாகினர்.

    கொடூரமாக நடந்த இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் இணை ஆனையர் கார்த்திக் விசாரணை நடத்தினார். முந்தைய கொலைகளுக்கு பழிதீர்க்கும் வகையில் இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Also read... தவறான தகவல்கள் அளிப்பது ராஜதந்திரம் ஆகாது - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

    இதை அடுத்து கொலையில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பழிக்குப்பழி வெறியில் காளி கோவில் வாசலுக்கு விரட்டிச் சென்று இளைஞரைக்கொன்று, தலையை தனியாக வெட்டி காளிக்கு பலிகொடுத்த சம்பவம் மதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: