நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக காதலியை மிரட்டிய காதலர் கைது

காதலியுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி, பணம் கேட்டு மிரட்டுவதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிடுவதாக காதலியை மிரட்டிய காதலர் கைது
மாதிரி படம்
  • Share this:
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த பெண், குவைத்தில் செவிலியராக உள்ளார். இவர் குவைத் செல்வதற்கு முன் காட்டுப்புதூரைச் சேர்ந்த மர்பின் தனேஷ் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கமாகி காதலித்துள்ளார்.

இந்நிலையில் தனேஷ் மீது, பெண்ணின் தாயார் அஞ்சுகிராமம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மகளுடன் நெருக்கமாக இருந்த படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியடுவதாக கூறி பணம்கேட்டு தனேஷ் மிரட்டுவதாக கூறப்பட்டுள்ளது.

அதன் பேரில் மர்பின் தனேஷை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், காதலி வெளிநாடு செல்ல பண உதவி செய்ததாகவும், தற்போது அவர் வேறொருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் கிடைத்ததால், ஏமாற்ற வேண்டாமென எச்சரித்து வாட்ஸ் ஆப் மூலம் படம், வீடியோக்களை அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.


இந்த புகார் தொடர்பாக 2 தரப்பிடமும் விசாரணை நடந்து வருகிறது.

Also read... கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவத்தை களமிறக்குவேன்... டிரம்ப் எச்சரிக்கை
Also see...
First published: June 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading