விளையாட்டுத் துப்பாக்கியால் சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்..நடந்தது என்ன?

Youtube Video

கோவையில் விளையாட்டுத் துப்பாக்கியில் சுட்டுக் கொண்ட சிறுவன் காதில் பிளாஸ்டிக் குண்டு சிக்கிக் கொண்டது. காதில் தண்ணீரை பீய்ச்சி அடித்து பிளாஸ்டிக் குண்டை அகற்றியுள்ளனர் அரசு மருத்துவர்கள். நடந்தது என்ன?

 • Share this:
  கோவை மாநகர காவல் துறையில் காவலராகப் பணியாற்றி வருகிறார் கலைச்செல்வி இவரது 7 வயது மகன் கிஷோர், விளையாட்டுத் துப்பாக்கி மீது அதிக ஆர்வம் கொண்டவர்; துப்பாக்கியோடு அதிக நேரம் பொழுதைக் கழிப்பவர். விளையாட்டுத் துப்பாக்கியைக் கையில் வைத்துக் கொண்டு வீடியோ கேமில் வரும் காட்சிகளைப் போல சுட்டு விளையாடியுள்ளார்.

  அப்போது தலையில் வைத்து சுடுவதைப் போல விளையாடியுள்ளார்.ஆனால், துப்பாக்கி நழுவி சிறுவனின் வலது காதுக்குள் துப்பாக்கி குண்டு புகுந்து சிக்கிக் கொண்டது.

  வலி தாங்க முடியாமல் சிறுவன் கதறி அழவே, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றுள்ளனர்.

  ஆனால் அங்கு உடனடியாக குண்டை அகற்ற யாரும் முன்வராததால், உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்குப் பணியில் இருந்த பெண் மருத்துவர் நித்யா, சிறுவனின் காதில் தண்ணீரை பீய்ச்சியடித்து பிளாஸ்டிக் குண்டை லாவகமாக வெளியே எடுத்துள்ளார்.  வீடுகளில் குழந்தைகள் மற்றும் வளர்ந்த குழந்தைகள் கைகளில் விளையாட்டுப் பொருட்களைக் கொடுக்கும்போது அவற்றை எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் பெற்றோர் சொல்லி அறிவுறுத்த வேண்டும்.

  மேலும் பாதுகாப்பாக விளையாடுவது குறித்தும் அவ்வப்போது சொல்லி கண்காணிக்க வேண்டும்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: