பாஜகவின் கட்டுப்பாட்டை மீறி பேசியதற்காக நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து கடந்த நவம்பர் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்த அவர், வேறு கட்சிகளில் சேர அழைத்தால் பரிசீலிப்பேன் என தெரிவித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வருகிறார்.
சமீபத்தில் காயத்ரி ரகுராம் கொடுத்த பேட்டியில் ஏற்கனவே இருந்த பிரச்னை தொடர்பாக திருமாவளவன் நடந்துகொண்ட விதத்தில் என் மனதில் உயர்ந்துவிட்டார் எனவும் தெரிவித்திருந்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இதையும் படிக்க : “அண்ணன் திருமாவளவனுக்கு நன்றி”... நேரில் சந்தித்த நடிகை காயத்ரி ரகுராம் நெகிழ்ச்சி..!
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவனை நடிகை காயத்ரி ரகுராம் அம்பேத்கர் திடலில் சந்தித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பகுதியில் அவர், “எதிர்பாராத மனிதர்கள் எனக்கு உதவியபோது. விசிக தலைவர், எம்.பி, அண்ணா தொல் திருமாவளவன் அவர்களுக்கும், விசிகவுக்கும் எனது நன்றிகள். ஆதரவு அளித்ததற்கு நன்றி. மரியாதை நிமித்தமான அற்புதமான சந்திப்பு இது” என பதிவிட்டிருந்தார்.
இந்த சந்திப்பு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “கருத்தியல் முரண்களைக் கடந்து மனித உறவுகளுக்கான மாண்புகளைப் போற்றுவது சிறுத்தைகளின் சிறப்பாகும். அம்பேத்கர் திடலுக்கு வருகை தந்த காயத்ரி ரகுராமை வரவேற்றுச் சிறப்பித்தோம். 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன்” என தெரிவித்திருக்கிறார்.
அம்பேத்கர் திடலுக்கு வந்த @Gayatri_Raguram அவர்களுக்கு 'உலக வரலாற்றில் பெண்கள்' எனும் நூலைப் பரிசாக அளித்தேன். அன்னை சாவித்திரிபாய் ஃபுலே அவர்களின் சகிப்புத் தன்மையும் ஜெயலலிதா அம்மையாரின் போர்க் குணமும் பொதுவாழ்வில் ஒவ்வொரு பெண்மணிக்கும் தேவை என்பதைச் சொல்லி அவரை வாழ்த்தினேன். pic.twitter.com/K0GIYwLIWT
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 21, 2023
மேலும், ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் காயத்ரி ரகுராம் தொடங்க இருக்கும் சக்தி யாத்ரா வெற்றிபெறவும் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gayathri Raghuram, Jayalalithaa, Savitribai Phule, Thirumavalavan