• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • குழந்தைகள் என்னுடையது ஆனால் அவரின் மனைவி என் தாய்... குழப்பத்தில் போலீஸ்!

குழந்தைகள் என்னுடையது ஆனால் அவரின் மனைவி என் தாய்... குழப்பத்தில் போலீஸ்!

ரமேஷ்குமார் மற்றும் ப்ரீத்தி

ரமேஷ்குமார் மற்றும் ப்ரீத்தி

தனது தாயாருக்கும் கணவர் ரமேஷ் குமார்க்கும் முறை தவறிய தொடர்பு  இருந்ததாகவும்,  பிரீத்தி குற்றம்சாட்டினார். சட்டப்படி பார்த்தால் ரமேஷ்குமார் தன்னை திருமணம் செய்யவில்லை என்றும் தனது தாயாரையே திருமணம் செய்ததாகவும் அவர் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குமரியில் 15 வயதில் கட்டாய திருமணம் செய்து வைத்து 2 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண், 10 ஆண்டுகள் கழித்து காதலித்த இளைஞரை சட்டப்படி கரம் பிடித்ததால் யார் உண்மையான கணவர் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சமையல் தொழிலாளியான இவருக்கும் கேரள மாநிலம் கோவளம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த 2009 ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் பாறசாலை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் நடந்தது.

    திருமணமாகி பத்து வருடங்கள் ஆன நிலையில் இந்த தம்பதியருக்கு ஒன்பது வயதில் ஒரு மகனும் நான்கு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக ரமேஷ்குமார் தனது மனைவி பிரீத்தி மற்றும் குழந்தைகளை முளகுமூட்டில் ஒரு வாடகை வீட்டில் குடியமர்த்தி விட்டு கடந்த 2017-ம் ஆண்டு சமையல் வேலைக்காக சவுதி அரேபியா சென்றார்.

    இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த மே மாதம் ரமேஷ்குமார் சொந்த ஊர் திரும்பினார். அப்போது  வீட்டில் இரண்டு குழந்தைகளையும் பூட்டி வைத்து விட்டு மனைவி பிரீத்தி வெளியே சென்றிருந்தது தெரிய வந்தது. இரவு வீட்டிற்கு வந்த மனைவியிடம் ரமேஷ்குமார் எங்கு சென்றுவிட்டு வருகிறாய் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கு கருத்து வேறுபாடு ஏற்படவே கடந்த மே 22ஆம் தேதி கணவர் மற்றும் 2 பிள்ளைகளை விட்டுவிட்டு தனியாக வாழப்போவதாக கூறி பிரீத்தி வீட்டைவிட்டு வெளியேறினார். சமாதானம் பலனளிக்காததால் தனது மனைவியை சேர்த்து வைக்குமாறு மே 24-ம் தேதி தக்கலை காவல் நிலையத்தில் ரமேஷ் குமார் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வாழ விரும்பவில்லை என்றும் தனியாக வாழ விரும்புவதாகவும் கூறி பிரீத்தி சென்றுவிட்டார். அவருடன் சேர்ந்து வாழ ரமேஷ்குமார் பல முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது.

    இந்நிலையில் பிரீத்தி, அகில் என்ற இளைஞருடன் தனியாக வசித்து வருவதாக ரமேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ரமேஷ்குமார் குழித்துறை மகளிர் போலீசாரிடம் புகாரளித்தார். அவர்கள் நடத்திய சமாதான பேச்சிலும் பிரீத்தி அவருடன் வாழ மறுத்து விட்டதாக தெரிகிறது.

    இந்நிலையில் ரமேஷ்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் அளித்தார். அதில் தனது மனைவி தன்னை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் உள்ளதை மறைத்து மோசடியாக முளகுமூடு காடுவெட்டி பகுதியை சேர்ந்த 26-வயதான அகில் என்ற இளைஞரை கடந்த 28ஆம் தேதி  திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

    தேவாலயத்தில் வைத்து மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்த புகைப்படங்கள் மற்றும் திருமண ஒப்பந்த பத்திரத்தை தனக்கு வாட்ஸ்-ஆப் மூலம் அனுப்பியதாகவும், தங்களை தொந்தரவு செய்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

    பெயர் மற்றும் வயதை மாற்றி மோசடியாக தன்னை பிரீத்தி திருமணம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரமேஷ்குமார் அந்த புகாரில் கூறியிருந்தார்.

    ரமேஷ் குமாரின் புகார் குறித்து பிரீத்தியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தது. பள்ளி பருவத்தில் அகிலை தான் காதலித்ததாகவும், பின்னர் தாயின் கட்டாயத்தின் பேரில் 15 வயது இருக்கும்போது ரமேஷ் குமாருக்கு சட்டத்துக்கு புறம்பாக தனது தாயின் வயது சான்றிதழை இணைத்து கட்டாயப்படுத்தி மோசடியாக திருமணம் செய்து வைத்ததாகவும் பிரீத்தி கூறினார்.

    கணவரை பிரிந்து வந்த தனக்கு முன்னாள் காதலர் அடைக்கலம் கொடுத்ததாகவும், அதனைத் தொடர்ந்து ரமேஷ்குமார் தன்னைப்பற்றி அவதூறு பரப்பியதால் அகிலையே சட்டப்படி திருமணம் செய்து கொண்டதாகவும் பிரீத்தி கூறியுள்ளார்.

    தனது தாயாருக்கும் கணவர் ரமேஷ் குமார்க்கும் முறை தவறிய தொடர்பு  இருந்ததாகவும்,  பிரீத்தி குற்றம்சாட்டினார். சட்டப்படி பார்த்தால் ரமேஷ்குமார் தன்னை திருமணம் செய்யவில்லை என்றும் தனது தாயாரையே திருமணம் செய்ததாகவும் அவர் கூறினார்.

    அகிலுடன் செய்து கொண்ட திருமணம் தான் சட்டபடி செல்லும் எனவும் ரமேஷ் குமாருடன் திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் அது சட்டப்படி செல்லாது என போலீசில் கூறிவிட்டார் பிரீத்தி.

    போலியான ஆவணங்களை வைத்து தன்னை திருமணம் செய்து பிரீத்தி ஏமாற்றிவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷ் குமார் பிடிவாதமாக இருக்கிறார்.

    இதில் தவறு செய்தது பிரீத்தியா, அவரின் தாயாரா, ரமேஷ் குமாரா அல்லது பிரீத்தியை தற்போது திருமணம் செய்துள்ள அகிலா என தெரியாமல் குமரி போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.இந்த விசித்திர வழக்கு பலரையும் வியக்க வைத்துள்ளது.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: