ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி

விமான நிலையம்

விமான நிலையம்

பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கென்யாவிலிருந்து சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு, ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆந்திர மாநிலம் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கென்யாவிலிருந்து விமானம் மூலம் கடந்த 10ம் தேதி சென்னை வந்த பெண், கார் மூலம் திருப்பதி சென்றுள்ளார். அங்கு மேற்கொண்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு, 12ம் தேதி கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து, அவரது மாதிரிகளை ஐதராபாத்திற்கு அனுப்பி மேற்கொண்ட, மரபணு பரிசோதனையில் இன்று அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அம்மாநிலத்தில், ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் நலமாக உள்ளதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில், யாருக்கும் தொற்று இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.

Also Read :  நகைக் கடன் தள்ளுபடி.. பொங்கலுக்கு தமிழக அரசின் குட் நியூஸ்

இதனிடையே தமிழகத்தில் ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 69 பேரின் மாதிரி முடிவுகள் இன்று அல்லது நாளை வெளிவரும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை ஒமைக்ரான் அறிகுறி இருக்கும் 89 பேரின் மாதிரிகள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 13 பேரின் முடிவுகள் ஏற்கெனவே வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

Also Read : மதுரை நெல்பேட்டை அருகே கட்டடம் இடிந்து தலைமைக் காவலர் மரணம்

First published:

Tags: Chennai, Omicron