அரியலூரில் 3 மாத கர்ப்பிணியான காவலர் தற்கொலை முயற்சி

news18
Updated: May 15, 2018, 8:13 PM IST
அரியலூரில் 3 மாத கர்ப்பிணியான காவலர் தற்கொலை முயற்சி
பெண் காவலர் வைஷ்ணவி
news18
Updated: May 15, 2018, 8:13 PM IST
அரியலூரில் கர்ப்பிணியான காவலர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் திருமணமாகி மூன்றே மாதங்களில் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஆயுதப் படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவிக்கும் மன்னார்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்துள்ளது.

சிங்கப்பூரில் பணியாற்றிய அவரது கணவர் கார்த்திக் திருமணத்திற்குப் பிறகு காவலர் குடியிருப்பில் தனது மனைவியுடன்  வசித்து வருகிறார். தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருக்கும் வைஷ்ணவி, நேற்று வேலை முடிந்து வீடு திரும்பிய பிறகு, தனி அறைக்குள் சென்று சேலையில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதை அறிந்த கணவரும் அக்கம் பக்கத்தினரும், வைஷ்ணவியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் வைஷ்ணவியின்  உடல் நிலை மோசமாக உள்ளது என்றும் 48 மணி நேரத்திற்குப் பிறகே  ஏதும் சொல்லமுடியும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
First published: May 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்