கொரோனா தடுப்பு ஊசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு உறவினர் வீட்டில் நகை கொள்ளை - பெண் கைது!

உறவினர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த சத்தியா

தன்னிடம் தடுப்பூசி இருப்பதாகவும் அதை போட்டுக்கொண்டால் கொரோனா வராது என சத்தியா கூறியுள்ளார்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கொரோனா தடுப்பு ஊசி போடுவதாக கூறி மயக்க ஊசி போட்டு உறவினர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளையடித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள லாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகன் கிருஷ்ணமூர்த்தி வயது 49. ஆதிமூலத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளார்.

  பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் பொழுது, அங்கே பெரம்பலூர் மாவட்டம் கீழக்கரை காட்டைச் சேர்ந்த ஆதிமூலத்தின் உறவுக்கார பெண்ணான சத்யா என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணமூர்த்தி ஓட்டி வந்த ஆட்டோவை நிறுத்தி உள்ளார். சத்யா தான் கிராமத்திற்கு செல்வதாகவும் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்து இருப்பதாகவும் தன்னை ஆட்டோவில் ஊருக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி அவர் ஆட்டோவில் சத்யாவை அழைத்துச் சென்றுள்ளார்.

  பின்னர் சத்தியா கிருஷ்ணமூர்த்தியின் வீட்டில் இன்று ஒரு நாள் தங்கிவிட்டு காலை செல்வதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தி சத்யாவை வீட்டில் தங்க அனுமதித்தார். அப்போது தன்னிடம் தடுப்பூசி இருப்பதாகவும் அதை போட்டுக்கொண்டால் கொரோனா வராது என கூறியுள்ளார். இதனை நம்பிய கிருஷ்ணமூர்ததி அவரது மனைவி மற்றும் மகள்கள் என வீட்டில் உள்ளவர்களுக்கு ஊசி போட்டுக் கொள்ள சம்மதித்துள்ளார்.

  இதனை அடுத்து கிருஷ்ணமூர்த்தி அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கும் சத்யா மயக்க ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட பின் நாள்வரும் மயக்கத்தில் உறங்கியதை அடுத்து சத்யபிரியா தனது கைவரிசையை காட்டி உள்ளார். கிருஷ்ண மூர்த்தியின் மனைவி ராசாத்தி கழுத்திலிருந்த 6 சவரன் தாலிக்கொடி மூத்த மகள் கிருத்திகா கழுத்திலிருந்த 10 சவரன் தாலி கொடி 1 சவரன் செயின் மற்றொரு மகளான மோனிகா அணிந்திருந்த 2 சவரன் செயின் மொத்தம் 19 சவரன் நகைகளை கழட்டிக் கொண்டு நள்ளிரவிலேயே சத்யபிரியா தப்பி சென்றுள்ளார்.

  Also read... உரிமை கோரப்படாத உடல்களை மருத்துவமனைகள் எவ்வாறு கையாளுகின்றன? அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு!

  அதன் பின்னர் மயக்கம் தெளிந்து காலையில் எழுந்து கழுத்தில் அணிந்திருந்த நகைகளை காணாததை பார்த்து பதறிய கிருஷ்ணமூர்த்தியின் குடும்பத்தினர் வீட்டின் பீரோவில் இருந்த நகை கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டிலிருந்த உறவுக்கார பெண்ணான சத்தியா மாயமாகி இருந்ததல், தடுப்பூசி என கூறி தங்களை ஏமாற்றிய மயக்க ஊசியை செலுத்தி வீட்டில் இருந்த நகையை கொள்ளையடித்து சென்றதாக ராமநத்தம் போலீசாரிடம் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்.

  புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மயக்க ஊசி போட்டு வீட்டில் இருந்த நகைகளை திருடிச் சென்ற சத்யா என்பவரை தேடி வந்த நிலையில் மங்களூர் பகுதியில் அவர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து ராமந்ததம் போலீசார் சத்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: