• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இயற்கை முறையில் நாப்கின்... நாமக்கல் பெண் சாதனை...!

இயற்கை முறையில் நாப்கின்... நாமக்கல் பெண் சாதனை...!

நாப்கின் தாயாரிக்கும் பெண்

நாப்கின் தாயாரிக்கும் பெண்

சமூகத்திலும், பொருளாதார ரீதியிலும் சுமதி தன்னை மட்டும் முன்னேற்றிக்கொள்ளவில்லை, தன் பகுதி பெண்களுக்கும் இவர் ஒரு ரோல் மாடலாகவே திகழ்கிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாமக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவர் இயற்கையாகக் கிடைக்கும் பருத்தியைக் கொண்டு பெண்களுக்கான நாப்கின்களை தயாரித்து வருகிறார். மகளிர் தினமான இன்று இந்த சாதனைப் பெண்மணி பற்றி பார்போம்.

பெண்கள் உடல் ரீதியாக சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மாதவிடாய் சுழற்சி. இது இயற்கையாக நடக்கும் உடல்ரீதியான மாற்றம் என்ற போதிலும், சமூகரீதியாக பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த விசயத்தில் பெண்களுக்கு இருந்து வந்தது. கட்டுப்பாடுகள் ஒவ்வொன்றாக தளர, அவர்கள் மாற்றத்தை நோக்கி அடியெடுத்து வைக்க நாப்கின்கள் உதவின.

ஆனால் வேதிப்பொருட்கள் மூலமாக தயாரிக்கப்படும் இந்த நாப்கின்கள், தற்போது பெண்களுக்கு வரமாக இருப்பதற்கு பதிலாக சாபமாக மாறி வருகின்றன. பூதாகரமாக உருவாகி வரும் இந்தப் பிரச்னைக்கு இயற்கையான வழியிலேயே தீர்வு கண்டுள்ளார், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பொத்தனூரைச் சேர்ந்த சுமதி.

சுமதி


சிறு வயது முதலே சுயதொழில் தொடங்க விரும்பிய இவர், நுலகராக பணியாற்றிய போது அது தொடர்பான பல்வேறு நூல்களை படிக்கத் தொடங்கினார். வார இதழில் வெளியான ஒரு விளம்பரத்தைப் பார்த்து நாப்கின்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட விரும்பியுள்ளார். 2011-ம் ஆண்டு சொந்த முயற்சியில் வங்கிக்கடன் பெற்ற சுமதி, அதனைக் கொண்டு நாப்கின் தயாரிப்பு பயிற்சி பெற்றதுடன், தொழிலையும் ஆரம்பித்தார்.

நாப்கின் தயாரிக்கும் பொத்தனூர் கிராம மக்கள்


எல்லோரையும் போல் இன்றி இயற்கையாக கிடைக்கும் பருத்திப் பஞ்சைக் கொண்டு இவர் தயாரித்து விற்ற நாப்கின்கள், கொஞ்சம், கொஞ்சமாக அப்பகுதி மக்களிடம் வரவேற்பை பெறத் தொடங்கின. மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் சருமம் தொடர்பான பிரச்னைகள் தீர ஆரம்பித்ததால் தற்போது அப்பகுதி மருத்துவர்கள் கூட பெண்களுக்கு இதை பரிந்துரை செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இயற்கையில் தயாரிக்கப்படும் நாப்கின்கள்


சமூகத்திலும், பொருளாதார ரீதியிலும் சுமதி தன்னை மட்டும் முன்னேற்றிக்கொள்ளவில்லை, தன் பகுதி பெண்களுக்கும் இவர் ஒரு ரோல் மாடலாகவே திகழ்கிறார். இவரது நாப்கின் தயாரிக்கும் தொழிற்சாலையில் 8 பெண்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் சுமதியின் மூலமாக பொருளாதார சுதந்திரத்தை அடைந்துள்ளனர்.

முயன்றால் முடியாதது எதுவும் உலகில் இல்லை

பொத்தனுார் கிராமத்தையே தாண்டிச் செல்லாத பெண்ணாக இருந்த சுமதி, இந்த நாப்கின் தயாரிப்பு மூலமாக தொழில்முனைவோராக மாறியுள்ளதுடன், பல மாநிலங்களுக்குச் சென்று பயிற்சியும் வழங்கி வருகிறார். பொத்தனூர் கிராம பெண்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் இந்த சுமதியின் கனவுகள் அனைத்தும் நனவாக நியூஸ் 18 தமிழ்நாடு வாழ்த்துகிறது.

Also see... நாளிதழ்களில் இன்றைய சுவாரஸ்ய செய்திகள்! (08.03.19)

உங்களது ராசிக்கான இன்றைய பலன்! (08-03-2019)

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: