கள்ளக்காதல்: கணவனை கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள்...
கள்ளக்காதல்: கணவனை கொலை செய்த மனைவிக்கு இரட்டை ஆயுள்...
கள்ளக்காதல்: கணவனை கொலை செய்த மனைவி
சினிமா பாணியில் நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு உதயபாலன் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை உதயலேகாவின் கள்ளக்காதலன் பிரபாகரன் எடுத்து சென்றார்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்த வழக்கில், மனைவிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் உதயபாலன். அதே பகுதியைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் பிரபாகரன் என்பவருக்கும் உதயபாலனின் மனைவி உதயலேகாவுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த உதயபாலனை கொலை செய்து விட்டு அவரது சொத்துக்களை அபகரிக்க உதயலேகாவும், பிரபாகரனும் திட்டமிட்டுள்ளனர்.
உதயலேகா தனது பெற்றோர் வீட்டுக்கு செல்லும் போது, இந்த கொலையை அரங்கேற்ற அவர்கள் இருவரும் முடிவு செய்தனர்.
அதன்படி, உதயலேகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது சொந்த ஊரான காரைக்கால் டி.ஆர்.பட்டினத்துக்கு சென்று விட்ட நிலையில், திட்டமிட்டபடி அன்றைய தினம் இரவு உதயபாலன் வீட்டுக்கு வந்த பிரபாகரன், அவரை வெட்டி கொலை செய்தார்.
சினிமா பாணியில் நகைக்காக கொலை நடந்தது போல் இருக்க வேண்டும் என்பதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு உதயபாலன் அணிந்திருந்த 5 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவற்றை பிரபாகரன் எடுத்து சென்றார்.
இதுதொடர்பாக கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், உதயலேகா ஆகியோரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே பிரபாகரன் இறந்து விட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தின் வழக்கு விசாரணை இன்று நடந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை 6-வது கூடுதல் செசன்சு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த்
உதயலேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு கூட்டு சதி, கொலை ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இரட்டை ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Also watch: அஜித் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம்
Published by:Anand Kumar
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.