ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'குழந்தைகளுக்கும், தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்த ஊர்க்காவல் படை வீரர்' - இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

'குழந்தைகளுக்கும், தனக்கும் பாலியல் தொல்லை கொடுத்த ஊர்க்காவல் படை வீரர்' - இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

பாதிக்கப்பட்ட பெண்

பாதிக்கப்பட்ட பெண்

Kanniyakumari District: கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் துறை பகுதியை சேர்ந்த சகாய லிசி சாந்தினி தனக்கும், இரண்டு பெண் குழந்தைகளுக்கும் ஊர்க்காவல் படை வீரர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :

தனக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த ஊர்க்காவல் படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் 2 குழந்தைகளுடன்  தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டம் ராஜகமங்கலம் துறை பகுதியை சேர்ந்தவர் சகாய லிசி சாந்தினி. இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவரது வீட்டின் அருகில் வசிக்கும் ஊர்க்காவல் படையை சேர்ந்த இளைஞர்,  சகாய லிசி சாந்தினிக்கும் அவரது  பெண் குழந்தைகளுக்கும் தொடர் பாலியல் தொல்லை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே ராஜாக்கமங்கலம் காவல் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில்  சகாய லிசி சாந்தினி புகார்  அளித்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  ஊர்க்காவல் படையில் பணியாற்றுவதால் இளைஞர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், சகாய லிசி சாந்தினி கருதிய நிலையில்  தனக்கும் குழந்தைகளுக்கும்  மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து தொல்லை அளித்து வரும் ஊர்க்காவல் படை வீரர் மீது   காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த 8 ம்  தேதி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்  நாகர்கோவிலில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சகாய லிசி சாந்தினி 2 குழந்தைகள் மீதும் தன் மீதும் திடீரென  மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

Also read... பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர், செயலாளர் - வைரலாகும் வீடியோ

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

-செய்தியாளர்: சரவணன்.

First published:

Tags: Kanniyakumari, Nagercoil, Suicide attempt