திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த அங்கன்வாடிக் கட்டடம் கை வைத்தாலே மணலைப் போல உதிரும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிடாம்பாளையம் கிராமத்தில் 8 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடம் தரமில்லாமல் கட்டப்பட்டதால் பொதுமக்கள் இளைஞர்கள் தங்கள் கை வைத்தவுடன் சிமெண்ட் கலவைகள் ஊந்து விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு 8 லட்ச ரூபாய் செலவில் பொய்யாமொழி என்பவர் ஒப்பந்தம் எடுத்து கட்ட்டப் பணி 8 நாட்களாக கட்ட்டப் பணி நடக்கிறது மணலைப் போல சரியும் கான்கிரீட் கல் உடைப்பதில் இருந்து கிடைக்கும் கிராவல் மண் வைத்து கட்டப்படுவதாக புகார் எழுந்தது.
மேலும் எம்.சாண்ட் மணலை பயன்படுத்தவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனை தொடர்ந்து அங்கிருந்த இளைஞர்களும், பொதுமக்களும் அந்தக் கட்டிடத்தை தொடும் போது சீட்டுக்கட்டைப் போல சரிந்தது கட்டிடம்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடந்து கலசப்பாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆய்வு அந்த பகுதியில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அந்த கட்டிடத்தை ஜே.சி.பி. வைத்து இடிக்க அவர் உத்தரவிட்டார்.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.