6 ஆண்டுகளில் 13 பேர் சிறுநீரக் கோளாறால் உயிரிழப்பு: உப்புத்தன்மை அதிகமுள்ள குடிநீர் - தீர்வுக்காக ஏங்கும் மக்கள்

புதுக்கோட்டையில் உள்ள வாகைப்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த பல வருடங்களாக சுத்திகரிக்கப்படாத நீரை அருந்தி வருகின்றனர்.

6 ஆண்டுகளில் 13 பேர் சிறுநீரக் கோளாறால் உயிரிழப்பு: உப்புத்தன்மை அதிகமுள்ள குடிநீர் - தீர்வுக்காக ஏங்கும் மக்கள்
குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க கிராம மக்கள் கோரிக்கை.
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட பணம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது வாகைப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலும் அங்கே வசிப்பவர்கள் கட்டட வேலை, விவசாயக் கூலி வேலை, கல் உடைக்கும் கூலித் தொழில் உள்ளிட்டவற்றைச் செய்தே அன்றாடும் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இந்தப் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து குடி தண்ணீர் பிரச்னை இருந்து வருகின்றது. இந்தப் பகுதிக்கு காவிரி தண்ணீர் வந்தாலும் அந்தத் தண்ணீருடன் உப்புத் தண்ணீரைக் கலந்துவிடுவதால் அதைக் குடிப்போருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படுகிறது.

மேலும், அந்தப் பகுதியில் வாகைப்பட்டி கண்மாய் மழை பெய்தால் தண்ணீர் நிரம்பி குடிதண்ணீருக்குப் பயன்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் கண்மாய் நிரம்பவில்லை என்பதால் குழாயில் வரும் உப்பு கலந்த குடிநீரைக் குடிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


Also see:

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது, கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் இந்தத் தண்ணீரைக் குடித்த 13 பேர் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். மருத்துவர்களிடம் கேட்கும்போது நீங்கள் குடிக்கும் குடிநீர் சரியில்லை. அதில் உப்பு அதிகமாக இருப்பதால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். எங்களுள் ஒரு சிலர் சிறு வயதிலேயே கணவனை இழந்து தவித்து வருகிறார்கள். வளரும் தலைமுறையினராவது நல்ல குடிநீரைக் குடிக்க வழிவகை செய்ய வேண்டும்.எங்களால் ஒரு கேன் 40 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வழியில்லை. அரசாங்கத்தால் மட்டுமே எங்களது குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட துறையினருக்கும் மனு கொடுத்தும் இதுநாள்வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வரும் நல்ல தண்ணீரை உப்புத் தண்ணீர் கலக்காமல் கொடுத்தால் நாங்கள் அந்தத் தண்ணீரைப் பிடித்துப் பயன்படுத்துவோம். இல்லையென்றால் வரும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading