பலாத்காரம் செய்த காதலன் : ஆட்சியரிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி..!

பலாத்காரம் செய்த காதலன் : ஆட்சியரிடம் புகார் அளித்த கல்லூரி மாணவி..!
காசி ராமலெட்சுமி மற்றும் வினித்
  • Share this:
தூத்துக்குடியில் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கும் காதலன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தூத்துக்குடி மேல அழகாபுரியினை சேர்ந்த சிவபெருமாள் என்பவரின் மகள் காசி ராமலெட்சுமி. இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது எதிர்வீட்டில் வசித்து பெருமாள் என்பவரது மகன் வினித்தினை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் காசி ராமலெட்சுமியின் பெற்றோர்கள் வெளியூர் சென்ற போது அவரது வீட்டிற்கு சென்ற வினித், காசி ராமலெட்சுமியினை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.


இதனால் கர்ப்பமான காசி ராமலெட்சுமி வினித்திடம் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்த போது ”உன்னை பலாத்காரம் செய்தபோது அதனை வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன், அதனை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன்” என்றும் வினித் மிரட்டியுள்ளார்.

மிரட்டியதோடு மட்டுமல்லாமல் தனது பெற்றோர்களிடம் காசி ராமலெட்சுமியினை அழைத்து சென்று வயிற்றில் உள்ள கருவினை கலைக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தன்னை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியவரையும், அவரது பெற்றோர்களையும் கைது செய்து தனக்கு உரிய பாதுகாப்பும், மருத்துவ சிகிச்சையும் அளிக்கும்படி காசி ராமலெட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.Also see...
First published: March 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading