மதுரையில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்த வேன்!

கூத்தியார்குண்டு விலக்கு அருகே செல்லும்போது வேன் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த வெங்கடேஸ்வரன் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியும் கீழே இறக்கிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே வேன் முற்றிலும் எரிந்தது.

மதுரையில் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று தீப்பற்றி எரிந்த வேன்!
தீப்பிடித்து எரியும் வேன்
  • News18
  • Last Updated: October 18, 2019, 5:42 PM IST
  • Share this:
மதுரை மாவட்டம் கூத்தியார்குண்டு விலக்கு அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த வேன் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருப்பரங்குன்றத்தில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக வெங்கடேஸ்வரன் என்பவர் தனது மனைவியுடன் சின்னமனூரில் இருந்து வேனில் சென்றுக் கொண்டிருந்தார்.

கூத்தியார்குண்டு விலக்கு அருகே செல்லும்போது வேன் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த வெங்கடேஸ்வரன் வேனை ஓரமாக நிறுத்திவிட்டு மனைவியும் கீழே இறக்கிவிட்டார். அடுத்த சில நிமிடங்களிலேயே வேன் முற்றிலும் எரிந்தது.

இதையடுத்து கடையில் இருந்த தீயணைப்பான் கருவியைக் கொண்டு தீயை அணைக்க வெங்கடேஸ்வரன் போராடினார். இதுகுறித்து தகவலறிந்து வந்த திருமங்கலம் தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

Also see...

First published: October 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading