ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரயில் பாத்ரூம் ஜன்னல்.. வெளியில் இருந்து பார்க்கும்போது அப்படியே தெரிந்ததால் அதிர்ந்துபோன பயணி

ரயில் பாத்ரூம் ஜன்னல்.. வெளியில் இருந்து பார்க்கும்போது அப்படியே தெரிந்ததால் அதிர்ந்துபோன பயணி

வெளியிலிருந்து உள்ளே பார்க்கும் விதமாக உள்ள ரயில் கழிவறை ஜன்னல்

வெளியிலிருந்து உள்ளே பார்க்கும் விதமாக உள்ள ரயில் கழிவறை ஜன்னல்

ரயிலின் கழிவறையை பிளாட்பார்மிலிருந்து பார்க்கும் வண்ணம் பொருத்தப்பட்டிருந்த ஜன்னலைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ளார் ஷைலேஷ் காமத் என்ற பயணி.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai | Hyderabad

  சென்னையைச் சேர்ந்தவர் ஷைலேஷ் காமத். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இவர் தன் மனைவியோடு சென்னை எக்மோரிலிருந்து ஹைதராபாத் நோக்கி காச்சிகோடா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார்.

  அப்போது கூட்டி ரயில்நிலையத்தில் கீழே இறங்கிப் பார்த்த போது அவர் பயணம் செய்த பெட்டியின் கழிவறையை பிளாட்பார்மிலிருந்து பார்க்கும் வண்ணம் ஜன்னல் ஒளிவு மறைவின்றி இருந்துள்ளது. எப்போதும் ஒட்டப்படும் கருப்பு பேப்பர் ஒட்டப்படாமல் இருந்ததால் கழிவறைக்குள் நடப்பதைப் பார்க்கும் விதமாக அந்த ஜன்னல் இருந்துள்ளது.

  இதனை அவர் வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் நியூஸ் 18 தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “நானும் என் மனைவியும் காச்சிகுட்டா எக்ஸ்பிரஸில் கடந்த செப்டம்பர் மாதம் 29-ம் தேதி சென்னையிலிருந்து ஹைதராபாத்துக்கு சென்றுக்கொண்டிருந்தோம். நள்ளிரவு 1 மணி அளவில் ரயில்  கூட்டி ரயில் நிலையத்தில் நின்றது.

  ஷைலேஷ் காமத்
  ஷைலேஷ் காமத்

  நான் தூக்கம் வரவில்லை என்று வெளியே வந்தபோதுதான் அந்த பெட்டியில் இருந்த கழிவறையை பிளாட்பார்மிலிருந்து பார்க்கும் வண்ணம் கழிவறை ஜன்னல் இருந்ததை கண்டேன். அதிர்ந்துபோய்விட்டேன். அதில் ஒட்டப்படும் கருப்பு கூலிங் பேப்பர் அகற்றப்பட்டிருந்தது.

  பின்பு அங்குள்ள டிடிஆரிடம் முறையிட்டேன். அவர் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆன்லைனில் புகார் தெரிவிக்கவும் என சொல்லிவிட்டார். பின்பு ஊர் வந்த சேர்ந்த பின்னர் ஆன்லைனில் என் புகாரை தெரிவித்தேன். ஆனால் 10 நாட்களான பின்பும் எந்த பதிலும் எனக்கு அளிக்கப்படவில்லை.
   
  View this post on Instagram

   

  A post shared by SHYLAISH KAMATH (@shylaish)  எனக்கு மிகுந்த மன உளைச்சலாக இருந்தது. எத்தனையோ பேர் பெண்கள், குழந்தைகள் உட்பட அந்த கழிவறையை பயன்படுத்தியிருப்பார்கள். இவ்வளவு அலட்சியமாக ரயில்வே நிர்வாகம் இருக்கிறது என்பது எனக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியது. அதன் பின்பே செப்டம்பர் 30-ம் தேதியன்று நான் பயணம் செய்தபோது ரெக்கார்ட் செய்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டேன்.

  ஷைலேஷ் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதம்.
  ஷைலேஷ் புகாருக்கு நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதம்.

  அது வைரலாகத் தொடங்கியது. அன்று மாலையே எனக்கு ரயில்வே நிர்வாகத்திடமிருந்து கடிதம் ஒன்று மின்னஞ்சல் மூலமாக அனுப்பபட்டது. அந்த கடிதத்த்தில் உங்கள் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதுவரை அந்த ஜன்னல் சரிசெய்யப்பட்டதா என்று தெரியவில்லை.” என்று ஷைலேஷ் தெரிவித்தார்.

  ஷைலேஷுக்கு கோட்டேஸ்வர ராவோ என்ற ரயில்வே அதிகாரியிடமிருந்து கடிதம் வந்துள்ளது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Indian Railways, IRCTC