உள்ளாட்சி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ... தேர்தல் என்று வந்துவிட்டால் தமிழகத்தில் பேனர்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால் தற்போது நாட்டையே தாண்டி அமெரிக்கா தேர்தலுக்காகவும் தமிழகத்தில் வாழ்த்து பேனர்கள் குவியத் தொடங்கியுள்ளன. அப்படி ஊர் எல்லை முதல் கிராமம் வரை வைக்கப்பட்டுள்ள இந்த வாழ்த்து பேனர்கள், எம்.எல்.ஏ-வுக்கோ, எம்.பி-க்கோ இல்லை. நம்ம ஊரு கமலா ஹாரிசுக்குத்தான்...
மன்னார்குடி அடுத்த குளசேந்திரபுரத்தைச் சேர்ந்த கோபாலன் என்பவரது மகள் வழிபேத்திதான் கமலா ஹாரிஸ். அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவரை, தங்கள் கிராமத்தில் ஒருவராக கருதி வாழ்த்தி பேனர் வைத்துள்ளனர் இந்த கிராம மக்கள்.
தேர்தல் முடிந்ததும் எம்.பி, எம்எல்ஏ-க்களே தொகுதி பக்கம் வருவதில்லை என்ற புகார் பரவலாக உள்ள நிலையில், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று, கமலா ஹாரின் எங்க ஊருக்கு வருவார் என நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர் இந்த கிராம மக்கள்.
துளசேந்திரபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி, அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும்கூட வாழ்த்து பேனர் வைத்து, நம்ம கமலாவை கொண்டாடி வருகின்றனர். ஜெயலலிதா கமலா ஹாரிசை ஆசீர்வதிப்பதை போலவும், மு.க.ஸ்டாலின் இடம்பெற்ற பேனர்களும் சமூக வலைதங்களில் வலம் வருகின்றன.
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.