முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருவள்ளூர்: தற்காப்புக்காக கொலை செய்ததாக பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி புகார்

திருவள்ளூர்: தற்காப்புக்காக கொலை செய்ததாக பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி புகார்

திருவள்ளூர்: தற்காப்புக்காக கொலை செய்ததாக பெண் விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்... ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி புகார்

திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காப்பிற்காக கொலை செய்ததாக பெண் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி பகீர் புகாரை எழுப்பியுள்ளார். பெண் விடுதலை வழக்கில் ஒரு தலைப்பட்சமாக விசாரித்து போலீசார் முடிவெடுத்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • 2-MIN READ
  • Last Updated :

பாலியல் தொந்தரவு செய்ததாக அஜித் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியான கெளதமி, தற்காப்பிற்காக செய்த கொலை என்பதால் விடுவிக்கப்பட்டார். ஆனால், கெளதமி, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அதுபற்றி போலீசார் விசாரிக்கவே இல்லை என்றும் கொலை செய்யப்பட்டவரின் மனைவி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு அல்லிமேட்டைச் சேர்ந்தவர் 25 வயதான அஜித். ஜனவரி 1ம் தேதி இரவு, இயற்கை உபாதைக்காக ஒதுக்குப்புறமாக சென்ற உறவினரான கெளதமி என்ற பெண்ணை கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும் அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளில் கெளதமி, அஜித்தைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட எஸ்பி அரவிந்தன். இளம்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையிலும் விசாரணையின் அடிப்படையிலும் இந்திய தண்டனைச் சட்டம், 106வது பிரிவின்படி, இந்தக் கொலை வழக்கை தற்காப்பிற்காக செய்த கொலை என்ற பிரிவின் கீழ் மாற்றி இளம்பெண்ணை விடுதலை செய்தார்.

இந்த நிலையில்தான், கொலை செய்யப்பட்ட அஜித்தின் மனைவி சுகன்யா, கெளதமி தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் அதைத் தட்டிக் கேட்டதால்தான் தனது கணவரை கெளதமி கொலை செய்ததாகவும் இதுகுறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் எனவும் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்ப்பு நாளில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து நமது செய்தியாளர் சம்பவ இடத்திற்கு சென்று அஜித் குடும்பத்தினர் தரப்பில் விசாரித்தபோது மேலும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அருமந்தை கிராமத்தில் வசிக்கும் சங்கர் - நளினி தம்பதியின் மகள் தான் கெளதமி; அஜித் பெரியம்மாவின் பேத்தி என்பதால், கெளதமி அஜித்திற்கு முறைப் பெண் வேண்டும்.

கெளதமி கடந்த சில மாதங்களாக காவல்துறை பணியில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் அவருக்கு கஞ்சா, மதுப் பழக்கம் இருப்பதாவும், பல இளைஞர்களோடு பழக்கம் இருப்பதாகவும் கூறி பெற்றோர் கண்டித்ததாக தெரிகின்றது.

ஆனால் கெளதமி பெற்றோரின் பேச்சைக் கேட்காததால், சோழவரம் காவல்நிலையத்தில் மகள் மீதே பெற்றோர் புகாரளித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் வீட்டை வி்ட்டு வெளியேறிய கெளதமி, சோழவரம் அடுத்த ஒரக்காடு அல்லிமேட்டைச் சேர்ந்த தனது சி்த்திகள் ரன்னீஸ், சுபா, சுமித்ரா வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் தான் குடும்பச் சண்டையில், அஜித்தும் சுகன்யாவும் பிரிந்தனர். அப்போது சுகன்யாவை சந்தித்த கெளதமி உன் கணவனை விட்டுவிடு நாம் சேர்ந்து வாழலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் நட்பாக பழகியதாக தெரிகின்றது.

ஆனால் கௌதமியுடன் பழகுவதை அஜித் கண்டித்துள்ளார். அதனால் சுகன்யா அவருடன் பழகுவதை குறைத்துக்கொண்டதாக தெரிகின்றது. தன்னை சுகன்யா மறுத்ததால் ஆத்திரமடைந்த கெளதமி, அஜித்துடன் நட்பாகப் பழகி, சம்பவ தினத்தன்று அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று திட்டமிட்டுக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டுகிறார் அஜித்தின் தாய்.

கெளதமி, தனது மகனைத் திட்டமிட்டுக் கொலை செய்ததற்கு ஆதாரமாக, கொலை வழக்கில் கண்டெடுக்கப்பட்ட கத்தி, கெளதமியின் கத்தி, அவரது சித்தி வீட்டைச் சேர்ந்தது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டதாகவும் கூறுகிறார் சுமதி

இந்த வழக்கில் சோழவரம் போலீசார், அஜித் தரப்பை விசாரிக்கவே இல்லை என்று உறவினர்களும் குற்றம்சாட்டுகின்றனர். கௌதமியும் அஜித்தும் ஏற்கனவே நன்கு நெருங்கி பழக கூடியவர்கள் என்றும் அப்படி இருக்கையில், ஏன் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அஜித்தின் மனைவி கேள்விஎழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க... கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து... பின்னணி என்ன?

மோசமான பழக்கங்கள் கொண்ட கெளதமி குறித்து சோழவரம் காவல்நிலையம், மாவட்ட எஸ்பியிடம் ஏற்கனவே புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்கிறார் அஜித்தின் மனைவி சுகன்யா.

ஆனால் முதற்கட்ட விசாரணையில் அஜித், ஏற்கனவே கெளதமியிடம் ஒருமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்ததாக மாவட்ட எஸ்பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் சுகன்யா அளித்துள்ள புகாரை முழுமையாக விசாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், அஜித் கொலை வழக்கில் பல சந்தேகங்கள் எழுகின்றன.

வீடியோ

' isDesktop="true" id="414019" youtubeid="jBr15ptYGtw" category="tamil-nadu">

அஜித் கொலை - எழும் கேள்விகள்

கொலை வழக்கை விசாரித்த சோழவரம் போலீசார், அஜித் குடும்பத்தினரையும் உறவினர்களையும் விசாரிக்காதது ஏன்?

விடுவிக்கப்பட்ட கெளதமி, கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையாக இருந்ததாக பெற்றோரே புகாரளித்திருந்ததை விசாரணையில் சேர்க்காதது ஏன்?

கெளதமி மீது அஜித்தின் மனைவி சுகன்யா முன்பே அளித்திருந்த புகார்களையும் கணக்கில் கொள்ளாதது ஏன்?

எல்லாவற்றிற்கும் மேலாக, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி கெளதமியின் சித்தி வீட்டைச் சேர்ந்தது என்பதையும் அதை கெளதமி எடுத்துச் சென்றதைப் பார்த்த சித்தியின் குழந்தைகளின் வாக்குமூலத்தையும் போலீசார் விசாரணையில் சேர்க்காதது ஏன்?

அஜித் கொலை வழக்கில், போலீசார் முழுமையான விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்துவார்களா? என்ற பல கேள்விகள் எழுகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Sexual Harssement, Thiruvallur