பெரியார் சிலைக்கு செருப்பு மாலை: கண்டனம் தெரிவித்து தி.க-வினர் சாலை மறியல்

செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட பெரியார் சிலை

 • News18
 • Last Updated :
 • Share this:
  பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போடப்பட்டதால் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் ட்விட்டர் பக்கத்தில் பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குறிய பதிவு ஒன்று வெளியானது. அந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

  அதனை தொடர்ந்து பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா அந்த சர்ச்சைக்குறிய பதிவினை தான் போடவில்லை என்றும் தனது அட்மின் தான் அதனை பதிவிட்டார் என்றும் தெரிவித்தார்.

  இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பெரியாரின் பிறந்த நாள் அன்று சென்னை, சிம்சனில் உள்ள பெரியார் சிலை மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பை தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

  செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட பெரியார் சிலை


  இதனை தொடர்ந்து இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே கவராப்பட்டு என்ற கிராமத்தில் உள்ள 7 அடி பெரியார் சிலைக்கு இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் செருப்பு மாலை அணிவித்து சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த நிகழ்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஒரத்தநாடு அண்ணா சிலை முன்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததை கண்டித்து தி.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்ட போது
  Published by:Vinothini Aandisamy
  First published: