கிருஸ்துமஸ்: கோவை புனித மைக்கேல் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது!

கோவை மைக்கேல் தேவாலயம்

கொரொனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நலமடையவும், கொரொனா தொற்றால் இனிமேல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காவும் இன்றைய தினம் பிராத்தனை செய்து இருப்பதாகவும் ஆயர் தாமஸ் அக்வினாஸ் தெரிவித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கோவையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டவுண்ஹாலில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நிகழ்வானது நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் நடைபெற்ற இந்த திருப்பலி நிகழ்வில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கொரொனா தொற்று காரணமாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு கிருமி நாசினி கையில் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே தேவாலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்திய தேவாலய நிர்வாகம், அவர்களை தனிமனித இடைவெளியுடன் அமர வைத்தது. இதனை தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சிறப்பு திருப்பலி நிகழ்வானது நடைபெற்றது.

கோவை மறை மாவட்ட ஆயர் தாமஸ் ஆக்வினஸ் இந்த சிறப்புத் திருப்பலியை துவக்கி வைத்தார். குழந்தை இயேசு பொம்மையை அனைவரிடமும் தூக்கி காட்டிய ஆயர், குழந்தை ஏசு பிறப்பை அறிவித்து அதனை கொண்டு சென்று குடிலில் வைத்தார். பின் ஆராதனைகள் மற்றும் சிறப்புத் திருப்பலி நிகழ்ஙுகளை ஆயர் தாமஸ் ஆக்வினாஸ் நடத்தினார்.

கொரொனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் நலமடையவும், கொரொனா தொற்றால் இனிமேல் யாரும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காவும் இன்றைய தினம் பிராத்தனை செய்து இருப்பதாகவும் ஆயர் தாமஸ் அக்வினாஸ் தெரிவித்தார்.

Also read... எம்ஜிஆரை உரிமை கொண்டாடுபவர்கள் அவருக்காக என்ன செய்திருக்கிறார்கள் - தேமுதிக பொருளாளர் பிரேமலதா கேள்வி

இந்த முறை வழக்கமான கொண்டாட்டம் சற்று குறைவாக இருந்தாலும் நள்ளிரவு சிறப்பு ஆராதனை, திருப்பலி நிகழ்வுகளுக்கு அரசு அனுமதி அளித்து இருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக தேவாலயத்திற்கு வந்த கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.

முறையான பாதுகாப்புடன் கிறிஸ்மஸ் பிராத்தனைகளில் ஈடுபட்டது மனநிறைவை தருவதாகவும் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர். நள்ளிரவு வேளையிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொட்டும் பனியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: