Home /News /tamil-nadu /

அவதூறு வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மார்ச் 18-ம் தேதி ஆஜராக சம்மன்...!

அவதூறு வழக்கில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மார்ச் 18-ம் தேதி ஆஜராக சம்மன்...!

ஆர்.எஸ்.பாரதி

ஆர்.எஸ்.பாரதி

கடந்த 2015-ல், வேளச்சேரியில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, தி.மு.க., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி பேசி உள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மார்ச் 18ம் தேதி நேரில் ஆஜராகும்படி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-ல், வேளச்சேரியில் நடந்த தி.மு.க., பொதுக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக, தி.மு.க., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி பேசி உள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு சார்பில், ஆர்.எஸ்.பாரதி மீது, 2016ல் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

Also read... பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டிஜிபி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? நீதிமன்றம் கேள்வி!

இந்த வழக்கு, எம்.பி., - எம்.எல்.ஏ.,கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு சமீபத்தில் மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவி, வழக்கு தொடர்பாக, மார்ச் 18ம் தேதி, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஆர்.எஸ்.பாரதிக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: DMK executive RS Bharadhi, Madras High court

அடுத்த செய்தி