திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ எம்.பிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன்...!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ எம்.பிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நேரில் ஆஜராக சம்மன்...!

மு.க.ஸ்டாலின்

முதல்வர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும், ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக முதல்வர் பழனிச்சாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் பழனிசாமி பற்றிய மக்களின் மனநிலை குறித்தும், வாக்கி டாக்கி கொள்முதல் விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்தும், ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, அவர்கள் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு இரு அவதூறு வழக்குகளை தொடர்ந்தது.

Also read... ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு தடை கோரி தீபா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

இந்த இரு அவதூறு வழக்குகளும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்குகள் இன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், இரு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, மே 6ஆம் தேதி ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: