• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எடப்பாடி, ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன்...!

எடப்பாடி, ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன்...!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

ஸ்டாலினின் கருத்து, தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, இருவர் சார்பிலும், அவருக்கு எதிராக 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் சார்பில் தொடரப்பட்ட 4 அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சி பற்றியும் (கவுண்டவுன் தொடங்கிவிட்டது, ஊழல் நாயகன் இ.பி.எஸ்.), வாக்கி டாக்கி கொள்முதல் (ரூ. 30 கோடி ஊழல்) விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து, தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி, இருவர் சார்பிலும், ஸ்டாலினுக்கு எதிராக 4 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை இன்று ஆஜராகும்படி, சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

Also read... முதல்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உடனே செயல்படுத்துக - அன்புமணி ராமதாஸ்

அந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தபோது, நான்கு வழக்குகளிலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மன் வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜுன் 14ஆம் தேதி ஆஜராகும்படி ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி சிவகுமார், வழக்குகளின் விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: