சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு...!

சிறார் பாலியல் வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு...!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: December 6, 2019, 11:08 AM IST
  • Share this:
சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளை விசாரிக்க சென்னை அமர்வு நீதிமன்ற கட்டிடத்தில் சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது.

சிறார் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நூறு வழக்குகள் நிலுவையில் இருக்கும் மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் சென்னையில், அமர்வு நீதிமன்ற கட்டிடத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் துவங்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில் இயங்கி வந்த மகளிர் நீதிமன்றம், எழும்பூருக்கு மாற்றப்பட்டதை அடுத்து, அந்த நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றமாக மாற்றப்பட்டுள்ளது.


இந்த சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.

பின்னர், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வழக்கறிஞர்களிடம் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, வழக்குகளில் விரைந்து தீர்வு காண இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், சென்னையில் நிலுவையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வழக்குகளை, கால வரம்பு நிர்ணயித்து முடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதிகளும், அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் மொத்தம் 16 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
First published: December 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading