மதுரையில் பெண் சிசுக் கொலைகளை தடுக்க வருவாய், சுகாதாரம், சமூக நலம் உள்ளிட்ட 10 துறையினர் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே நடைபெற்ற சிசு கொலை சம்பவத்தின் எதிரொலியாக சிசுக் கொலைகளை தடுக்க சிறப்புக்குழு அமைக்கப்படும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து 10 துறைகள் அடங்கிய சிறப்புக்குழு ஒன்றை அமைத்து, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.
வருவாய்த்துறை, காவல்துறை, சமூக நலத்துறை, சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதார பணிகள் துணை இயக்குனர், அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர், சுகாதார பணிகள் இணை இயக்குநர், மதுரை சைல்டு லைன் - 1098, ஒருங்கிணைந்த சேவை மையம் ஆகிய துறைகளுடன் சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக்குழு சிசுக் கொலைகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்வது, சிசு கொலை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மீட்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வு குறித்த பணிகளையும் மேற்கொள்ளும்.
Also read... ஜல்லிக்கட்டு - ஜனவரியில் காளைகளுக்கு உடல் தகுதி சான்றிதழ்!
மேலும், ஒரு குடும்பத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் வறுமை மற்றும் கல்வியறிவின்மை காரணமாக சிசுக் கொலைகள் நடப்பதாகவும், வளர்க்க இயலாத குழந்தைகளை இல்லங்களுக்கு மாற்றம் செய்து அவர்களுக்கு தேவையான வாழ்விடம், கல்வி ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Also read... அதிகரிக்கும் கொரோனா: பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் - ராமதாஸ்
குழந்தைகளை பராமரிக்க இயலாவிட்டால் அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் தொட்டியில் குழந்தைகள் திட்டத்தில் குழந்தைகளை வழங்கலாம் எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.