ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடலூரில் திருமணம் செய்ய மறுத்த அத்தை மகளைக் கொலை செய்த இளைஞர்!

கடலூரில் திருமணம் செய்ய மறுத்த அத்தை மகளைக் கொலை செய்த இளைஞர்!

பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட வெண்மதியின் உடல்

பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்ட வெண்மதியின் உடல்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  கடலூரில் திருமணம் செய்ய மறுத்ததால் அத்தை மகளை கொன்று தூக்கில் தொங்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  கடலூர் மாவட்டம் சேடபாளையம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம்- ரூத் ராணி தம்பதியருக்கு 3 பெண் குழந்தைகள். மூன்றாவது பெண் வெண்மதி கடந்த 17-ம் தேதி சேடப்பாளையம் காப்புக்காட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.

  தற்கொலை செய்து கொண்டதாக கருதி பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடலை அடக்கம் செய்தனர். இந்நிலையில், வெண்மதியை கொலை செய்ததாக அவரின் அத்தை மகன் பிரசாந்த் குடிபோதையில் உளறியுள்ளார்.

  இதனால் சந்தேகமடைந்த வெண்மதியின் தந்தை ஆறுமுகம், கடலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆறுமுகத்தின் இரண்டாவது பெண் லட்சுமியை, பிரசாந்த் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பிரசாந்தின் காதலை லட்சுமி ஏற்க மறுத்துள்ளார்.

  இதனால், லட்சுமியை திருமணம் செய்து வைக்குமாறு அவரின் பெற்றோரிடம் பிரசாந்த் சண்டை போட்டுள்ளார். லட்சுமியை திருமணம் செய்து வைக்க மறுத்ததால், மூன்றாவது மகளான வெண்மதியையாவது திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார் பிரசாந்த்.

  இதற்கும் ஆறுமுகம் மறுத்துள்ளார். இதனால் நேரடியாக வெண்மதியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

  அதை ஏற்க மறுத்த வெண்மதி, பிரசாந்தை செருப்பால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரசாந்த் வெண்மதியை கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்கவிட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதை அடுத்து வேடபாளையம் காப்பு காட்டில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்ட வெண்மதி உடலை மருத்துவ குழு மூலம் வட்டாட்சியர் தலைமையில் தோண்டி எடுக்கும் பணியை செய்து வருகின்றனர்.

  வெண்மதியை கொலை செய்த பிரசாந்தை போலீசார் தேடி வருகின்றனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Murder