தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு!

வேலூரில் ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று நிறைவு!
தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated: July 20, 2019, 7:01 AM IST
  • Share this:
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் காரணமாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்றுடன் முடிவடைய உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள், ஜூலை 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கூட்டத் தொடரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து, ஜூலை 30-ம் தேதி வரை என 23 நாட்களுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.


இதைத் தொடர்ந்து துறை வாரிய மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், விதி எண் 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

இதனிடையே, வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால், 10 நாட்களுக்கு முன்னதாகவே, சட்டப்பேரவை கூட்டத்தொடரை முடிக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, இன்று சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடருக்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

Loading...

Also see...

First published: July 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...