அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு..

அரசு மனநல காப்பக கொரோனா நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மனநல காப்பக நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு..
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
  • Share this:
அரசு மனநல காப்பக கொரோனா நோயாளிகளுக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் 26 உள்நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அருகருகில் இருந்த இரண்டு ஆண்களுக்கான வார்டுகளில் 120 பேர் தங்கியுள்ளனர். அதில் 26 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

75 வயதுக்கு மேலானவர்கள் என்ற காரணத்தினால் இரண்டு பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 24 பேர் காப்பக வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கியிருந்த வார்டுகளில் இருந்த மற்றவர்களுக்கும் பரிசோதனை எடுத்ததில் நெகடிவ் என தெரிய வந்தது.


Also read... சென்னையில் ஜுலை தொடங்கி படிப்படியாக குறையும் கொரோனா தொற்று

கீழ்ப்பாக்கம் அரசு மன நல காப்பகத்தில் மொத்தம் 800 நோயாளிகள் உள்ளனர். மற்ற வார்டுகள் அருகில் இல்லாததால்
120 பேர் தவிர மற்றவர்களுக்கு அறிகுறிகள் வந்தால் பரிசோதனை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.காப்பக இயக்குநர் பூர்ண சந்திரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் காப்பக வளாகத்தில் உள்ள 24 நோயாளிகளுக்கும் ராஜீவ் காந்த அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

அதன் பிறகு அவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள் என தற்போது காப்பக பொறுப்பு இயக்குநராக இருக்கக் கூடிய சரவண ஜோதி தெரிவித்தார். மேலும் அனைத்து நோயாளிகளும் அறிகுறிகள் இல்லாமல் , உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
First published: July 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading