Home /News /tamil-nadu /

காதலை ஏற்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இளைஞர்- திருச்சியில் பரபரப்பு

காதலை ஏற்க மறுத்த மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு ரயில் முன் பாய்ந்து உயிரை விட்ட இளைஞர்- திருச்சியில் பரபரப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

திருச்சி மாவட்டத்தில் 11 ம் வகுப்பு பள்ளி மாணவியை கத்தியால் குத்தி விட்டு ரெயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள திருச்சி சாலையில் வசித்து வரும் 16 வயதான மாணவி தனியார் பள்ளி ஒன்றில் 11 ம் வகுப்பு படித்து வருகிறார். இறுதித் தேர்வை நேற்று எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு சென்ற மாணவி பின்னர் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றுள்ளார். திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தன்னுடைய காதலை தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து உள்ளிட்ட 10 இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு தப்பினார். இதனால் மாணவி ரத்த வெள்ளத்தில் அலறல் சப்தம் போடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் விரைந்து வந்து மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மாணவிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், ‘பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கேசவன் வயது 22 என்பதும் ஏற்கனவே அந்த மாணவியை கடத்திச் சென்றது தொடர்பாக கடந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும் தெரியவந்தது. அதனையடுத்து, மாணவியை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்ற இளைஞரை போலீசார் தேடி வந்தனர்.

    அப்போது கீழே பூசரிப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடைப்பதாக வந்த தகவலை அடுத்து திருச்சி ரயில்வே போலீசார் மற்றும் மணப்பாறை போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். அங்கிருந்த மக்கள் இறந்தவர் கேசவன் என்பதை உறுதி செய்தனர். மேலும் இது தொடர்பாக கேசவனின் தந்தைக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர் வந்து பார்த்து விட்டு இறந்தவர் கேசவன் தான் என்பதை உறுதி செய்தார்.

    தமிழ்நாட்டில் நீண்ட நாள்களுக்குப் பிறகு 100-யைக் கடந்த கொரோனா பாதிப்பு

    அதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து திருச்சி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் மாணவியுடன் கேசவன் பேசிய ஆடியோ ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime News, Trichy

    அடுத்த செய்தி