• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெல்லை கொண்டாநகரத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிகொலை!

நெல்லை கொண்டாநகரத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிகொலை!

நெல்லையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

நெல்லையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

இதனை தொடர்ந்து சுத்தமல்லி போலீஸார் மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டா நகரம் வி.ஏ.ஓ அலுவலகம் அருகே இருக்கும் கோவில் பின்புறம் ரத்தகாயத்துடன் உடல் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.

  • Share this:
    நெல்லை கொண்டாநகரத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நெல்லை மாவட்டம் கொண்டாநகரம் பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன். இவரது மகன் மாரியப்பன் (32) இவர் தின கூலி அடிப்படையில் கட்டிடதொழில்,பெயிண்டிங் தொழில் உள்ளிட்டவைகளுக்கு செல்வது வழக்கம். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை திருட்டு உள்ளிட்ட 26க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ள நிலையில், இவரை போலீஸார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்து செல்வதும் வழக்கம்.

    இந்த நிலையில் தினக்கூலி அடிப்படையில் 22ம் தேதி பெயிண்டிங் பணிக்காக மாரியப்பன் சென்றுள்ளார். தினமும் பணிமுடித்து மாலையில் வீடுதிரும்பும் வழக்கமான நேரத்தை தாண்டியும் மாரியப்பன் வீடு திரும்பாத நிலையில், சந்தேகமடைந்த மாரியப்பனின் தந்தை வழக்கமாக செல்லும் பல்வேறு இடங்களில் தேடியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நெடுநேரமகியும் மாரியப்பன் குறித்த தகவல் இல்லாததை அறிந்து சுத்தமல்லி காவல் நிலையத்திலும் அர்ஜூனன் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சுத்தமல்லி போலீஸார் மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொண்டா நகரம் வி.ஏ.ஓ அலுவலகம் அருகே இருக்கும் கோவில் பின்புறம் ரத்தகாயத்துடன் உடல் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இதனைதொடர்ந்து சம்பவ இடம் சென்ற போலீஸார் ரத்தகாயங்களுடன் இருப்பது மாரியப்பன் உடல் என உறுதி செய்த நிலையில் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை சம்பவம் குறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியப்பன் மீது உள்ள வழக்குகள் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: