போலீஸ் ஜீப் மோதி தாய் - மகள் படுகாயம்.. திசை திருப்ப முயலும் போலீசார்?
போலீஸ் ஜீப் மோதி தாய் - மகள் படுகாயம்.. திசை திருப்ப முயலும் போலீசார்?
போலீஸ் ஜீப் மோதி தாய் - மகள் படுகாயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தைச்சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பிரபாவதி என்ற பெண்ணும் அவரது தாய் சியாமளா ஆகிய இருவரும் பண பரிவர்த்தனைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் தாயும், மகளும் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது ரோந்து பணி போலீசாரின் ஜீப் மோதிய விபத்தில் படுகாயமடைந்த பெண்களிடம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக வழக்குப்பதிவு செய்யுமாரு போலீசார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பிரபாவதி என்ற பெண்ணும் அவரது தாய் சியாமளா ஆகிய இருவரும் பண பரிவர்த்தனைக்காக கள்ளக்குறிச்சியில் உள்ள வங்கிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது அவர்களது இரு சக்கர வாகனத்திற்கு பின் கச்சிராயபாளையம் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி வந்த ரோந்து பணி போலீசாரின் ஜீப் மோதி விபத்துக்குள்ளாகி இருவரும் சிறிது தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் தற்பொழுது கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்து குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக வந்த போலீசார் நடந்த சம்பவத்தை விசாரித்துவிட்டு அவர்களிடம் காவல்துறை ஜீப் மோதியதாக கூறவேண்டாம் அடையாளம் தெரியாத தண்ணீர் லாரி மோதியதாக கூறுமாறு கேட்டுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்கள் இருவரும் வழக்கை திசை திருப்பாமல் தங்கள் மீது மோதிய வாகனத்தை ஓட்டி வந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.